தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்தல்,வாக்காளர் பட்டியல் சரிபாா்த்தல்,வாக்காளர் சேர்த்தல்,நீக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்பார்வையிட தொகுதி பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து 234 தொகுதிகளுக்குமான தொகுதி பார்வையாளர்களுக்கான பட்டியலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டாா்.
இதில் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி பார்வையாளராக திமுக மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொகுதி பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிக்குரிய கழக மாவட்ட செயலாளர்/பொறுப்பாளர் கலந்து பேசி அவர்களுக்கு உதவிடும் வகையில் கிளை/பூத் வாரியாக தொடர்பு கொண்டு BLA-2 மற்றும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் குறித்த தலைமை கழக அறிவுறுத்தலை முழுமையாக செயல்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியல் சரிபார்த்து புதிய வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் பெயர்கள் நீக்கல்-திருத்தம் செய்தல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை நேரடியாக ஆய்வு செய்து மேற்கொள்ளும் பணி விவரங்களை வாரம் ஒரு முறை தலைமை கழகத்திற்கு சமர்ப்பிக்க உள்ளனர்.
