விளாத்திகுளம்: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், குளத்தூர் மின் விநியோக பிரிவிற்குட்பட்ட குளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர் காக்கும் மருந்துகள் உள்ளதாலும், நோயாளிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக பொதுமக்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ,ஊழியர்கள் மற்றும் குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வப்பாண்டி கோரிக்கையை வைத்திருந்தனர்.
;
இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு இன்று ( 07.10.24) 25 KVA/11KV மின்மாற்றி நிறுவப்பட்டு இன்று பயன்பாட்டுக்கு வந்தது.
இதனால் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மின்வாரிய துறை அதிகாரிகளுக்கும் மற்றும் பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர் .
மேலும் ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள்
ஊராட்சி மன்ற தலைவர்க்கு தங்களின் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார்கள்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி ஊரக உபகோட்ட உதவி செயற்பொறியாளர், குளத்தூர் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வப்பாண்டி அவர்கள் கலந்துகொண்டு மின் மாற்றிய இயக்கி வைத்தனர்.

