தூத்துக்குடி புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழா – 2024, சங்கரபேரி சாலைப் பிரிவில் உள்ள திடலில் 5வது புத்தகத் திருவிழா துவங்கியுள்ளது. அக்டோபர் 11 ம் முதல் 13ம் தேதி வரை நெய்தல் கலைத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
தூத்துக்குடியின் 5வது புத்தகத்திருவிழாவின் 4ம் நாளான்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் புத்தக அரங்குகளைப் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி மகிழ்ந்தார். மேலும், வாசகப் பெருமக்களோடு உரையாடினார். பின்னர் பார்வையாளர்களுக்கும் திமுகவை சேர்ந்தவர்களுக்கும் முத்தமிழ் அறிஞர் பதிப்பகத்தின் திராவிடத்தால் வாழ்கிறோம் என்ற புத்தகத்தை எல்லோருக்கும் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், நகர அமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பகுதி செயலாளா்கள் ரவீந்திரன், ஜெயக்குமாா், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு, கவுன்சிலர் சரவணக்குமாா், மற்றும் கருணா, மணி, அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.
புத்தகத் திருவிழாவில், புத்தகக் கடைகளில் ஏராளமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. தோட்டக்கலை சார்பாகக் காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு வீடு, பறவைகள், பூக்கள் போன்ற வடிவத்தைச் செய்து பார்வைக்காக வைத்திருந்தனர், அது வருபவர்களின் கண்களைக் கவரும் வகையிலிருந்தது. இந்த புத்தகத் திருவிழாவில் நாவல், சிறு கதைகள், சட்ட புத்தகங்கள், செய்யுள் புத்தகங்கள், வரலாறு, குழந்தைகளுக்கென தனிப் புத்தகங்கள் எனப் பல வகையான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன

