December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினி நலம் பெற வேண்டி தூத்துக்குடியில் ராகவேந்திரா கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து தேர் இழுத்த ரசிகர்கள்

தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில், மாவட்ட இணை செயலாளர் ஆர்.தவமணி தலைமையில்,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பூரண நலம் பெற வேண்டி, தூத்துக்குடி மீளவிட்டான் ஸ்ரீ ராகவேந்திரா கோவிலில் தலைவர் ரஜினிகாந்த் பெயருக்கு சிறப்பு அர்ச்சனை செய்து, தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.

இதில் மாவட்ட நிர்வாகிகள் ஆண்டவர் எஸ்‌.முருகன், ஆர்.ஜெயம், விபிஎம், ராமமூர்த்தி, ராமசாமி, ரஜினி செல்வம் , தேவேந்திரன், ஏகாம்பரம், மூர்த்தி, வள்ளி ராமன், முருகன், தனபால் , சிவா, ராஜ், அசோக், கண்ணன், கணேசன், லிங்கா குமார், முருகன் , பாலா , ரஜினி ராஜ், ரஜினி முத்து உள்ளிட்ட ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.