December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

கோவில்பட்டி கி.ராஜநாராயணன் நினைவரங்கத்தில் புத்தகத் திருவிழா

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரம், கி.ரா நினைவரங்கத்தில், 2024 அக்டோபர் 03 முதல் அக்டோபர் 13 வரை “புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலைவிழா” சிறப்பாக நடைபெற உள்ளது.
  • மேற்கண்ட புத்தகத் திருவிழா,
    காலை 10.00 மணிமுதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும்.
  • நெய்தல் கலைவிழா 04.10.2024, 05.10.2024, 06.10.2024, 12.10.2024, 13.10.2024 ஆகிய தினங்களில் மாலை 6.00 மணிமுதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும்.

இந்த புத்தகத்திருவிழா மற்றும் நெய்தல் கலை விழாவின் போது புத்தகக் கண்காட்சி, அனைத்து துறைசார்ந்த கண்காட்சி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள், புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நகைச்சுவை பேச்சு, கருத்தரங்கம், பட்டிமன்றம், நகைச்சுவை சொல்லாடல், கதையாடல், வில்லிசை, தேவராட்டம், கிராமியப்பாடல்கள் ஆகியவை சிறப்பாக நடைபெற உள்ளது. மேற்படி விழாவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.