December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் சாம்சங் நிறுவனத்தை கண்டித்து சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் நிறுவனத்தின் ஆலை செயல்பட்டு வருகிறது.  இங்கே தொலைக்காட்சி, வாஷிங் மெஷின், குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.இங்கே பணியாற்றும் ஊழியர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு ,தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்திற்கு சிஐடியு தொழிற்சங்கம் மற்றும் பிற அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ஊழியர்களின் போராட்டம் காரணமாக தொலைக்காட்சி, வாஷிங் மெஷின், குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவற்றின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

படம் கோப்பு

இதனிடையே சாம்சங் நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பி உள்ள மின்னஞ்சலில் இந்த வேலை நிறுத்த போராட்டம் சட்டவிரோதமானது என்றும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் வேலைக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் அடையாள அட்டை முடக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இருந்தாலும் சாம்சங் நிறுவனத்தின் எச்சரிக்கையும் மீறி ஊழியர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். அதன் தொடர்ச்சியாக
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று

தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க சட்டங்களுக்கு விரோதமாக செயல்படும் சாம்சங் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இந்திய அரசியல் சாசனப்படி சங்கம் அமைக்கும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும். தொழிற்சங்கத்தை பதிவு செய்ய விண்ணப்பித்து 90 நாட்களுக்கு மேலாகியும் இனியும் காலதாமதம் செய்யாமல் தமிழக அரசு உடனடியாக சங்கத்தை பதிவு செய்ய வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை வவலியுறுத்தி தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.