December 1, 2025
#விளாத்திகுளம்

விளாத்திகுளத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விளாத்திகுளம். செப்.28 ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையை எதிர்த்தும்,சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த தினமான செப் 28 ஆம் தேதியை நாடு முழுவதும் கார்ப்பரேட் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும் என்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை ஆதரித்து விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முண்ணனி சார்பில் ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கையை எதிர்த்தும், பகத்சிங் பிறந்த நாளை கார்ப்பரேட் எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் புவிராஜ் ஆர்ப்பாட்டத்தை துவங்கி வைத்து பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஐ) செயலாளர் லெனின்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாக குழு உறுப்பினர் பாலமுருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ராமசுப்பு, ராமலிங்கம்,நடராஜன், கமலக்கண்ணன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் ஜோதி,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ) மாவட்ட பொருளாளர் பிச்சை, மாவட்ட நிர்வாகி ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.