01/11/2016. தூத்துக்குடி
திருச்செந்தூர் ரோட்டில்
நடைபெற்ற விபத்தில் அரசு பேருந்து மனுதாரர் காந்தி த/பெ காசிராஜன் என்பவரின் இடது காலில் ஏறி இறங்கியது இதில் மனுதாரர் காந்தி தனது இடது காலில் முட்டிக்கு கீழ் இழந்தார். இந்த வழக்கானது தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது 11.02.2020 அன்று நீதிபதி திரு. ஹேமா அவர்கள் ரூபாய் 11,23,000/- வட்டியுடன் வழங்க உத்தரவிட்டு தீர்பளித்தார், இதனை எதிர்த்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது, மேல் முறையீட்டில் கீழ் கோர்டின் தீர்ப்பை 11.11.2021 அன்று உறுதி செய்தது உயர் நீதி மன்றம். உயர்நீதிமன்ற தீர்பிற்கு பிறகு நஷ்ட ஈடு தொகை வழங்காத காரணத்தால் தற்போதய CJM நீதிபதி திரு.வசித்குமார் அவர்கள் உத்தரவின் படி இன்று 23.09.2024 நீதிமன்ற அமினா, திரு.டென்சிங் மற்றும் திரு.அமிர்தராஜ் தலைமையில்
அரசுப்பேருந்து TN57 N 2584 ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மனுதார் தரப்பில் வழக்கறிஞர் திரு.A.செல்வராஜ் ஆஜரானார்.

