December 1, 2025
#விளாத்திகுளம்

விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள்களை மார்க்கண்டேயன் எம்எல்ஏ வழங்கினார்.

விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் தவசிமுத்து தலைமை வகித்தார்.திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 117 மாணவர்கள்,99 மாணவிகள் என மொத்தம் 216 மாணவ மாணவியர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

உடற்கல்வி இயக்குநர் பால்சாமி,விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ்,துணைத் தலைவர் வேலுச்சாமி, விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் மத்திய ராமசுப்பு, மேற்கு அன்புராஜன்,புதூர் மத்திய ராதாகிருஷ்ணன்,மாவட்ட கவுன்சிலர் நடராஜன்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் இமானுவேல்,மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கம்,கனகவேல், கிருஷ்ணகுமார்,பேரூர் கழகப் பொருளாளர் சரவணன்,வார்டு செயலாளர்கள் சங்கரலிங்கம், ஜெயசங்கர்,அய்யனார்,சுப்புராஜ், தாளமாணிக்கம், வெங்கடேசன்,மாரிராஜ்,வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி செண்பகராஜ்,முன்னாள் வார்டு கவுன்சிலர் ராமமூர்த்தி,தகவல் தொழில்நுட்ப அணி விளாத்திகுளம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஆசிரிய ஆசிரியைகள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்

.