தூத்துக்குடியில் தமிழ்நாடு உப்பு நிறுவனம் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் விஇ ரோடு தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு உப்பு நிறுவன மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் கலந்து உப்பு உற்பத்தியாளர்கள் மத்தியில் தொழில் மேம்பாட்டு குறித்து பேசினார். சகாய மாதா சால்ட் நிறுவனர் மைக்கேல் மோத்தா வரவேற்புரை ஆற்றினார்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள உப்பு உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டு உப்பு உற்பத்தி மற்றும் விற்பனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு உப்பு நிறுவன மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தமிழ்நாட்டில் 50-ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தியானது நடைபெற்று வருகின்றது மொத்தம் 4-ஆயிரம் உப்பு உற்பத்தியாளர்கள் உள்ளனர் உப்பு உற்பத்தியாளர்கள் சார்பில் ஒரு கமிட்டி குழு அமைக்கப்பட்டுள்ளது இந்த குழுவானது பிற மாநிலங்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உப்பு உற்பத்தி நடைபெறும் இடங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ள உள்ளது இந்த கள ஆய்வின் மூலம் உப்பு உற்பத்தியாளர்களுக்கு லேண்ட் லீஸ், உப்பு உற்பத்தி மற்றும் விற்பனை உரிமம் மற்றும் ஏற்றுமதி வழிமுறைகள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்கப்படுவதோடு உடனடியாக அரசுக்கு தெரிவித்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.
தமிழ்நாடு உப்பு நிறுவனம் மூலம் ஆண்டிற்கு 1.5-மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகின்றது இதில் 1-லட்சத்து 10-ஆயிரம் டன் ரா சால்ட் தொழிற்சாலைகளுக்கும் மேலும் அரசு ஒப்பந்த அடிப்படையில் ரேசன் கடைகள் மற்றும் சத்துணவு மையங்களில் கொடுக்கப்பட்டு வருவதாகவும் உப்பு தயாரிப்பில் மற்ற மாநிலங்களில் நவீன உத்திகளை பயன்படுத்துகின்றனர். நாமும் லேட்டஸ்ட் டெக்னாலஜி பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தி அதிகரிக்க முடியும் அதேவேளையில் உப்புத் தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அவர்களது பணிச்சுமைகளை எளிதாகக்கவும் முயலுவோம் என்று தமிழ்நாடு உப்பு இலாகா மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்தார். இதில் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில் பிரகாஷ், சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்கம் நிர்வாகி சந்திரமேனன் மற்றும் வேதாரண்யம் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் வேதரத்தினம், ரமேஷ் கந்தசாமி, செந்தில், தூத்துக்குடி தண்பாடு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கத்தினர், தூத்துக்குடி சிறு தொழில் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

