தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக அன்னை இந்திரா நகர் பகுதி திமுக பொது உறுப்பினர் கூட்டம், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி எட்டையபுரம் சாலை லெட்சுமி கார்டனில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு இந்திரா நகர் பகுதி செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார், பகுதி அவைத் தலைவரும் மாமன்ற உறுப்பினருமான ரெங்கசாமி வரவேற்றார். மாவட்ட பிரதிநிதிகள் தர்மராஜ், புவேஸ் நாதன், செல்வகுமார், பகுதி பொருளாளர் துரைராஜ், துணை செயலாளர்கள் செல்லத்துரை, பூமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். Ok
கூட்டத்தில் சிறப்புரையாற்றிய ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா பேசுகையில் ;
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக, மக்கள் நலனுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், நலத்திட்டங்கள் என எண்ணற்ற திட்டங் களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். திமுக ஆட்சியின் நலத்திட்டங்களால் ஒவ்வொரு குடும்பத்திலும் பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். தமிழக மக்களுக்கு திமுக ஆட்சியில் கிடைத்து வரும் நலத்திட்டங்கள், வேறு எந்த மாநிலத்திலும் கிடைத்ததில்லை. அனைத்து துறைகளிலும் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு இந்தியாவில் நம்பர் 1 முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார், நாம் முதலமைச்சரின் திட்டங்களை மக்களிடையே வீடு வீடாக கொண்டு சென்றால் 2026 தேர்தலில் முதலமைச்சரின் இலக்கான 200 தொகுதிகளை தான்டி 234 தொகுதிகளிலும் தி.மு.க. எளிதாக வெற்றியை பெற்று விடும் அதற்காக நமது இந்திரா நகர் பகுதி கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் தேர்தல் களப்பணிகளை தொய்வின்றி நேர்த்தியாக செய்யவேண்டுமென கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன், தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வகுமார், தொண்டர் அணி அமைப்பாளர் வீரபாகு, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வபெருமாள், பொறியாளர் அணி தலைவர் தர்மராஜ், மாவட்ட பிரதிநிதி ரவீந்திரன், பகுதி மகளிரணி அமைப்பாளர் ரமணி, வட்டச் செயலாளர்கள் ராஜன் கார்த்திகேயன் வார்டு பிரதிநிதி கிஷோர், ஐடி விங் வினோத், இளைஞரணி ராஜ்குமார் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள், இளைஞரணியினர், மகளிரணியினர், சார்பு அணி அமைப்பாளர்கள் அமைப்பாளர்கள், திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக 3 வது வார்டு செயலாளர் தேவேந்திரன் நன்றியுரை ஆற்றினார்.

