விளாத்திகுளம்,செப்.21: விளாத்திகுளம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது.
விளாத்திகுளம் அறம் செய்ய அறக்கட்டளை சார்பில் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடந்தது.
பள்ளி வளாகத்தில் வைத்து நடந்த விழாவிற்கு தலைமையாசிரியை இந்திராணி தலைமை வகித்தார். அறம் செய் அறக்கட்டளை நிர்வாக டிரஸ்டிகள் மாரியப்பன்,பாரதிசங்கர்,செந்தில்வேல்முருகன்,சந்திரசேகர்,சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் பள்ளியில் பயிலும் 22 மாணவ மாணவியர்களுக்கு சீருடை இலவசமாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் ரத்தினமணி,ரேவதி,பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வபாக்கியம்,உறுப்பினர் செண்பகவள்ளி, அறம் செய் அறக்கட்டளை நிர்வாகிகள் சித்துராஜ்,இப்ராஹிம்,
சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

