December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் நினைவு தினம்; தலைவர்கள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

ஒட்டப்பிடாரம், செப்.8:சுதந்திரப் போராட்டவீரர் சுந்தரலிங்கனார் செப்டம்பர் 8ம் தேதி அவரது நினைவு தினம் ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்படுகிறது மேலும் 225 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கவர்னர்கிரி ஊராட்சியில் அமைந்துள்ள வீரன் சுந்தரலிங்கரனார் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள குதிரையுடன் கூடிய திருவுருவ சிலைக்கு, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் கனகரத்தினம் சுகுமார், சுந்தரலிங்கனார் பேரவை தலைவர் முருகன், செயலாளர் தேவேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள்

அருண்குமார், தேன்மொழி சுடலைமணிமுன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லதா கருணாநிதி, ஒன்றிய திமுக தொண்டரணி அமைப்பாளர் கோபால், பொறியாளர் அணி மணிகண்டன், இளைஞரணி விக்கி, கார்த்திக், கிளை செயலாளர்கள் இளங்கோ,

பெரியதுரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சுதந்திர வீரர் சுந்தரலிங்கனார் நினைவை போற்றும் வகையில் அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.