தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான
சி.த செல்லபாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “ தமிழக முதலமைச்சராக பணியாற்றிய எடப்பாடி பழனிச்சாமி பொற்கால ஆட்சியை அளித்தார்.
ஆனால் தற்போது திமுக ஆட்சியில் அவல நிலையை மக்கள் சந்தித்து வருகின்றார்கள். தொழிலாளர் நலத்துறை அமைச்சராக 2011ல் சி.த செல்லபாண்டியன் ஆகிய நான் பொறுப்பேற்ற போது சிறப்பாக பணியாற்றினேன். சிவகாசியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலர் மரணம் அடைந்தார்கள். அன்றைக்கு அம்மா அரசு இறந்தவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் கொடுத்தது. உடனடியாக காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தோம்.
ஆனால் இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சியில் சாத்தான்குளம் அருகே உள்ள குறிப்பன்குளத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மூன்று பேர் இறந்துள்ளார்கள். ஆனால் தமிழக அரசு மூன்று லட்ச ரூபாய் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த பணத்தை கூட தற்போது வரை கொடுக்கவில்லை.
சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் கொடுத்த இந்த அரசு, பட்டாசு குடோன் விபத்தில் இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மற்றும் தொழில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ஆனால், அதனை வழங்காத தமிழக அரசினை கண்டிக்கின்றோம்.
தருவைகுளம் மீனவர்களுக்கு 1.5 கோடி அபராதம் இலங்கை அரசு விதித்துள்ளது. இது குறித்து பேசுகையில், தூத்துக்குடி, தருவைகுளம் மீனவர்களுக்கு இலங்கை அரசு 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இது போன்று எந்த காலத்திலும் அபராதம் விதிக்கப்பட்டது கிடையாது.
இந்த திராவிட அரசும், மத்தியில் ஆளும் அரசும் இதனை கண்டுகொள்வதாக தெரிவதில்லை. பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நான் பேசிக்கொள்கிறேன் என்கிறார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை ஒரு மாத காலமாகியும் மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை அதையும் வன்மையாக கண்டிக்கின்றேன்.
திமுக அரசின் விலைவாசி உயர்வால் மக்கள் ஏன் நாம் வாக்களித்தோம் என்று இருக்கின்றார்கள். தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரு லட்சமாக இருந்த கல்யாண மண்டபம் வாடகை 5 லட்சமாக மாறி இருக்கிறது. அதுவும் மாமன்றத்தில் தீர்மானமே நடைபெறாமல், ஆகவே தூத்துக்குடி மாநகராட்சியில் குளறுபடியான நிர்வாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பல இடங்களில் தண்ணீர் உடைந்து வீணாக போய்க் கொண்டிருக்கிறது.
சாயர்புரம் அருகே உள்ள காமராஜ் நகரில் மின்துறை பணியாளர்களை தனிநபர் அடித்து விரட்டியுள்ளார். மேலும், அருப்புக்கோட்டையில் பெண் டிஎஸ்பி யின் தலைமுடியை இழுத்து அராஜகத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஆகவே, மோசமான திராவிட ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கின்றது.
ஆகவே, இந்த அவலமான ஆட்சி அகற்றப்பட வேண்டும். மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். யாரிடமும் குறைகளை கூற முடியவில்லை. எங்கு பார்த்தாலும் பிரச்னை, காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. போலீசாருக்கே பாதுகாப்பிலாத போது வியாபாரிகளுக்கு எவ்வாறு பாதுகாப்பு இருக்கும். அந்த அளவிற்கு ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. ஆகவே, அடுத்த 2026ல் எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சி மலரும் என்று கூறினார்.
பேட்டியின் போது
ரஷ்முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜாகோபால், மாவட்ட வர்த்தக அணிசெயலாளர் துரைசிங், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பிரபாகர், மற்றும் கேடிசி சங்கா், கனிராஜ் உடனிருந்தனர்..

