December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 153வது பிறந்தநாள் விழா; தலைவர்கள் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தூத்துக்குடி.செப்.05 பாரத திருநாட்டின் விடுதலை போராட்ட மாபெரும் தென்னிந்திய வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள் இன்று.

தமிழ் நாட்டில் தென்னகம் வீரம் விளைந்த மண் இங்கே எண்ணற்ற சுதந்திர வீரர்கள் இந்திய சுதந்திரத்காக போராடி உயிர்த்தியாகம் செய்துள்ளார்கள் அந்த வரிசையில் வெள்ளையனை எதிர்த்து . இந்தியர்களால் மட்டுமே நடத்தப்பட்ட சுதேசி கப்பல் நிறுவனம் வ. உ. சிதம்பரம்பிள்ளை தலைமையில் 1906ம் ஆண்டில் நிறுவப்பட்டது.

முதன்முதலில் சுதேசி கப்பல் நிறுவனத்தின் நீராவிக் கப்பல் தூத்துக்குடி மற்றும் கொழும்புக்கு இடையே 1991 முடிய இயக்கப்பட்டது.

அந்தவகையில் சிதம்பரனார் அவர்களின் 153வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஓட்டப்பிடாரத்தில் அவரது இல்லத்தில் அமைந்துள்ளது திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர். க.இளம்பகவத்,இ.ஆ .ப அவர்கள் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா , மாவட்ட கண்காணிப்பாளர் .ஆல்பர்ட் ஜான் இ.கா ப., அவர்கள்,ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் எல்.ரமேஷ,வ.உ.சிதம்பரனார் அவர்களின் வாரிசுதார் திருமதி.உ.செல்வி அவர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.