December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாநகரம் சண்முகபுரம் பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் சிவன் கோவில் தெரு சோனா மண்டபத்தில் நடைபெற்றது. அமைச்சர் கீதாஜீவன் உரையாற்றினார்.

தூத்துக்குடி மாநகரம் சண்முகபுரம் பகுதி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் சிவன்கோயில் தெரு சோனா மண்டபத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலை வகித்தனர். பகுதி அவைத் தலைவர் (பொ) ஜோசப் தலைமை தாங்கினார், கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சிறப்புரையாற்றினார். சண்முகபுரம் பகுதி செயலாளரும் மாநகராட்சி சுகாதார குழு தலைவருமான சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்;
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் அறிவுரையின்படி சிறப்பாக செயல்பட்டு 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றோம். தூத்துக்குடியில் நம்மை எதிர்த்து போட்டியிட்டவர்கள் அனைவருக்கும் டெபாசிட் இழக்கச் செய்தோம், அதேபோல் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கழகத் தலைவர் முதலமைச்சர் ஆணையின்படி தீவிரமாக தேர்தல் பணியாற்றி 200 தொகுதிக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி இரண்டாவது முறையாக தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும். இதற்காக உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் தேர்தல் களப்பணிகளை செய்ய வேண்டும் என்றார்.
ஜெகன் பெரியசாமி பேசுகையில்; இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.
அவர் தொடர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும் அதற்கான மக்கள் பணிகளை கட்டமைப்புகளை அனைத்து பகுதிகளிலும் சிறப்பான முறையில் உடன்பிறப்புகள் செய்ய வேண்டும். சமூக வலைத்தளங்கள் மூலம் திமுக மீது பரப்பப்படும் பொய் குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலடியை நமது நிர்வாகிகள் கொடுக்க வேண்டும். 2026 தேர்தலுக்கான கூட்டணியை தலைவர் பார்த்துக் கொள்வார். அவர் இடும் கட்டளைகளின் படி, வியூகங்கள் படி நாம் களப்பணியாற்ற வேண்டும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வார்டு கழக பொது உறுப்பினர் கூட்டங்களை உடனடியாக நடத்துவது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முதலமைச்சரின் இலக்கான 200 தொகுதிகளில் வெற்றி பெற கழகத் தோழர்கள் முழு மூச்சுடன் தேர்தல் பணி செய்ய வேண்டும், புதிய இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கையை இல்லந்தோறும் அனைத்து வார்டுகளிலும் நடத்துவது, செப்டம்பர் 15 திமுக முப்பெரும் விழாவினை முன்னிட்டு சண்முகபுரம் பகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் கழக கொடி கம்பங்களை புதுப்பித்து புதிய கொடிகள் ஏற்றவும், வீடுகள்தோறும் சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்த்து, புதிய வாக்காளர் மற்றும் விடுபட்ட வாக்காளர்களை சேர்த்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் வடக்கு மாவட்ட பொருளாளர் சுசி ரவீந்திரன், மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி கோட்டுராஜா, கலைச்செல்வி, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் பிரபு, மாவட்ட பிரதிநிதிகள் ராஜ்குமார், சக்திவேல், வட்ட செயலாளர்கள் பொன்ராஜ், சுரேஷ் குமார், கருப்பசாமி, சுவாமி நாதன், மாரீஸ்வரன் மாமன்ற உறுப்பினர்கள் சரண்யா ராஜ்குமார், பேபி ஏஞ்சலின், பாப்பாத்தி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பகுதி துணை செயலாளர் ஜெயசிங், முன்னாள் வட்ட செயலாளர் மாரியப்பன், கதிரேசன், மற்றும் வட்ட பிரதிநிதிகள், இளைஞர் அணி, மகளிரணி, தகவல் தொழில்நுட்ப அணியினர் உட்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.