தூத்துக்குடி தமிழ்நாடு சட்டமன்ற சட்ட விதிகள் 2024 -25’க்கான ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சட்ட விதிகள் ஆய்வுக் குழுத் தலைவர் மார்க்கண்டேயன் எம் எல் ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை குறித்த குறிப்பாணைகளும், அறிவிக்கைகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
பின்னர் மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ பேசுகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் தமிழகம் எல்லாதுறைகளிலும் முன்னேற்றமடைய வேண்டும் என்ற அடிப்படையில் 24 மணி நேரத்தில் 20 மணிநேரமும் தமிழ்நாட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவது குறித்தும் அதை அறிவித்து அனைத்து தரப்பினருக்கும் ெசன்றடைகிறதா என்று ஆய்வு கூட்டமும் நடத்தி வருகிறார் இந்நிலையில் அனைத்து திட்டங்களும் சட்டங்களும் எல்லோருக்கும் முறையாக சென்றடைய வேண்டும் என்பதில் அனைரும் கவனமாக இருந்து பணியாற்ற வேண்டும். என்று பேசினார்.
நிகழ்ச்சியில் ஜெயம் கொண்டம் தொகுதி கண்ணன், சேலம் தெற்கு பாலசுப்பிரமணியன், திண்டிவனம் தொகுதி அர்ஜுனன், சாத்தூர் தொகுதி ரகுராமன், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி மான்ராஜ், விளவங்கோடு தொகுதி முனைவர் தாரகை கத்பட் மற்றும் சட்டமன்றப் பேரவையில் அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

