December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

மாநில அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் விளாத்திகுளம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கோவில்பட்டியில் தனியாா் திருமண மண்டபத்தில் வைத்து தென்னிந்திய ஸ்போர்ட்ஸ் அண்ட் கல்சுரல் டிரஸ்ட் மற்றும் ராஜ் யோகா ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் கல்சுரல் டிரஸ்ட் சாா்பில் 10-வது மாநில அளவிலான யோகா சாம்பியன்சிப் போட்டி நடைபெற்றது. இதில் தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். இதில் விளாத்திகுளம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் இருந்து கலந்து கொண்ட 3 -ஆம் வகுப்பு மாணவன் நித்திஸ்பாண்டி,4 -ஆம் வகுப்பு மாணவர்கள் கவின்,சாய் சந்தோஷ், 5-ஆம் வகுப்பு மாணவிகள் அழகுலட்சுமி,அக்க்ஷயா ஆகியோர் அதிக புள்ளிகள் பெற்று முதல் பரிசிற்கான சான்றிதழ் மற்றும் கோப்பையை பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தலைமையாசிரியை,ஆசிரியர்கள் ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

மாநில அளவிலான யோகா போட்டியில் வெற்றி பெற்ற விளாத்திகுளம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பெற்றோர்கள்  தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.