தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள ஸ்ரீவைகுண்டபெருமாள்புரம் கிராமத்தில் புதிய பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து
ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து 6.50 லட்சம் மதிப்பில் புதிய பயணியர் நிழற்குடை கட்டும் பணியை விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனிசக்தி ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கீழவைப்பார் ஊராட்சி மன்ற தலைவர் ரோஸ்மேரி உட்படஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

