தமிழக சட்டமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு சாா்பில் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் வைத்து 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஒருங்கிணைப்பு குழு சார்பில் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மாநில நெசவாளர் அணி நிர்வாகிகளுக்கு எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் திமுக கழக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலியை திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளரும் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளருமான வசந்தம் ஜெயக்குமார் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்.

