தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில், மாநகரம், நகரம், ஒன்றியம், பகுதி வாரியாக கழக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநகரம், நகரம், ஒன்றியம், பகுதி வாரியாக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. கீழக்கண்ட தேதிகளில் அறிவிக்கப்பட்ட இடங்களில் நடைபெறும் இந்த செயல்வீரா்கள் கூட்டங்களை சம்பந்தபட்ட மாநகர, நகர, ஒன்றிய பகுதி கழகச் செயலாளா்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து நடத்திடவும் சம்பந்தபட்ட மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், வார்டு மற்றும் கிளைக் கழகச் செயலாளா்கள், பிரதிநிதிகள் கழக தோழா்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும் கேட்டுக்கொள்கிறேன்.
கூட்டங்கள்; 28.08.2024 புதன் கிழமை மாலை 5.00 மணி செங்குந்த முதலியார் திருமண மண்டம், கழுகுமலை. (கோவில்பட்டி மத்திய ஒன்றியம்) 28.08.2024 புதன் கிழமை இரவு 7.00 மணி காமராஜா் திருமண மண்டபம், கோவில்பட்டி. (கயத்தாறு மேற்கு ஒன்றியம்) 30.08.2024 வெள்ளி கிழமை இரவு 7.00 மணி கலைஞா் அரங்கம் தூத்துக்குடி. (தூத்துக்குடி மாநகரம்) 31.08.2024 சனிக்கிழமை காலை 10.00 மணி கலைஞா்அரங்கம், தூத்துக்குடி (போல்பேட்டை பகுதி) 31.08.2024 சனிக் கிழமை மாலை 5.00 மணி பாலசரஸ்வதி திருமண மண்டபம், மில்லா்புரம். (அண்ணா நகா் பகுதி) 31.08.2024 சனிக் கிழமை இரவு 7.00 மணி ஆறுமுக நாடார் திருமண மண்டபம், தூத்துக்குடி. (பிரையண்ட் நகர் பகுதி) 01.09.2024 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி மரியா மஹால், முத்தையாபுரம் (முத்தையாபுரம் பகுதி), 01.09.2024 ஞாயிற்று கிழமை மாலை 5.00 மணி ஈஸ்வரி திருமண மண்டபம், மட்டக்கடை. (திரேஸ்புரம் பகுதி), 01.09.2024 ஞாயிற்று கிழமை இரவு 7மணி சோனா மஹால், பால கிருஷ்ணா தியேட்டா் எதிரில், தூத்துக்குடி (சண்முக புரம் பகுதி), 02.09.2024 திங்கள் கிழமை காலை 10.00 மணி ஆவுடையம்மாள் திருமண மண்டபம், எட்டையபுரம் (கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம்), 04.09.2024 புதன் கிழமை காலை 10.00 மணி இந்து நாடார் திருமண மண்டபம், பசுவந்தணை (ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம்), 04.09.2024 புதன் கிழமை மாலை 5.00 மணி சமத்துவபுரம் திருமண மண்டபம் நாகலாபுரம். (புதூா் மத்திய ஒன்றியம்), 04.09.2024 புதன் கிழமை மாலை 6.00 மணி ஸ்ரீ கிருஷ்ணன் திருமண மண்டம், வெம்பூர் (புதூா் மேற்கு ஒன்றியம்), 09.09.2024 திங்கள் கிழமை காலை 10.00 மணி பத்திரகாளியம்மன் திருமண மண்டபம், சிவஞானபுரம். (விளாத்திகுளம் மேற்கு ஒன்றியம்), 09.09.2024 திங்கள் கிழமை காலை 11.30 மணி பு.ஏ.ஆ.மஹால், அம்பாள் நகா், விளாத்திகுளம். (விளாத்திகுளம் மத்திய ஒன்றியம்), 09.09.2024 திங்கள் கிழமை மாலை 6.00 மணி தாமரை மஹால், இனாம் மணியாச்சி, (கோவில்பட்டி மேற்கு ஒன்றியம்), 10.09.2024 செவ்வாய் கிழமை காலை 10.00 மணி சமுதாய நலக் கூடம், அகிலாண்டபுரம். (கயத்தாறு மத்திய ஒன்றியம்), 10.09.2024 செவ்வாய் கிழமை மாலை 6.00 மணி கம்மவார் திருமண மண்டபம், புதூர் (புதூா் கிழக்கு ஒன்றியம்), 10.09.2024 செவ்வாய் கிழமை இரவு 7.00 மணி காமாட்சி திருமண மண்டபம், குளத்தூா். (விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம்), இந்த பகுதியில் நடைபெறுகின்றன என்று அமைச்சர் கீதாஜீவன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

