December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மேயர் ஜெகன் பொியசாமி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சூழற்சி முறையில் எல்லா பகுதிகளிலும் புதிதாக நடைபெறும் பணிகளையும் ஓப்பந்ததாரர்களிடம் நல்ல முறையில் செய்து கொடுக்க வேண்டும். என்று வேண்டுகோள் விடுத்து வருவது மட்டுமின்றி மாநகராட்சி அலுவலகம் போல்பேட்டை முகாம் அலுவலகங்களில் பொதுமக்கள் நோில் சந்தித்து கொடுக்கும் மனுக்களுக்கு தங்களது கருத்துக்களை கேட்டறிந்து அதற்கும் அரசின் சட்டதிட்ட விதிகளின் படி தீர்வு கண்டு வருகிறார்.
இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட சுந்தரவேல்புரம் மற்றும் அதன் அருகிலுள்ள பால் பண்ணண தெரு மற்றும் செயின்ட் மேரிஸ் காலனி அருகில் உள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். போல்பட்டை பகுதி பிரதிநிதி ஜோஸ்பர் உள்ளார்.