தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள் ,வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தமிழக முதலமைச்சாின் உத்தரவிற்கிணங்க. டூவிபுரத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் போல்பேட்டை முகாம் அலுவலகம் எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் ஆகிய 3 இடங்களில் பொதுமக்கள் சமூக ஆர்வலா்கள் என அனைத்து தரப்பினரும் நோில் சந்தித்து கொடுக்கப்படும் கோாிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு.அதை துறை வாாியாக உள்ள அரசுத்துறை அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டு பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாநகராட்சி 4வது வார்டுக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி திருக்கோவில் நிர்வாகத்தினர் நோில் சந்தித்து அந்த கோவிலில் நடைபெறும் விளக்கு பூஜைக்கு திருவிளக்குகள் பக்தர்கள் நலன் கருதி தந்து உதவிடுமாறு கோாிக்கை விடுத்ததையடுத்து கோவில் திருவிளக்கு பூஜைக்கு நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொண்டதின் படி 54 விளக்குகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நிர்வாகத்தினாிடம் கலந்துரையாடலில் பேசும் போது
எம்மதமும் சம்மதம்
என்ற அடிப்படையில் அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்தோடு திராவிட மாடல் ஆட்சியை தளபதியார் வழங்கி வருகிறார். இந்து மக்களின் கோாிக்கையை ஏற்று இந்த திருவிளக்கின் தீப ஓளி உங்கள் வாழ்க்கையின் ஓளி விளக்காகவும் தீய சக்திகள் மறையட்டும் எல்லோரும் எல்லா செல்வங்களோடும் இருக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் என்று கூறினார்.
உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதா தேவி, கவுன்சிலர்கள் நாகேஸ்வாி, ஜெயசீலி, வட்ட அவைத் தலைவர் முனியசாமி, வட்ட செயலாளர் சதீஷ்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, அல்பட், ஆகியோர் உடனிருந்தனர்.

