December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

நாகலாபுரம்அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் பேரணி நடைபெற்றது.

சென்னை பல்கலைக்கழகத்தின் காவல்துறை சார்பில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கல்லூரி மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இது போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

அதேபோல் நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.
விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு பற்றி மாணவ மாணவியர்களிடம் சிறப்பு உரையாற்றினார்.அதனைத் தொடர்ந்து அனைவரும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மேலும் சங்கரலிங்கபுரம் காவல் நிலையம் எஸ்.ஐ முருகேசன்,கல்லூரி பேராசிரியர்கள் முனியசாமி, கண்ணன்,சுரேஷ்பாண்டி,ஆல்ரின் அதிசயராஜ்,மரியதாஸ்,ராஜா சங்கர்,மோகனாம்பாள்,எஸ்தர், ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாட்டை பொருளாதார துறை தலைவர் மகேஷ் செய்திருந்தார்

.