December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

விளாத்திகுளம் அருகேயுள்ள சிவஞானபுரத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் மார்க்கண்டேயன் எம்எல்ஏ பங்கேற்பு

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், சிவஞானபுரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது மேலும் இந்த முகாமில் சக்கம்மாள்புரம்,சிவஞானபுரம், கே.குமரெட்டையாபுரம்,அருங்குளம்,அ.சுப்பிரமணியபுரம், வெள்ளையம்மாள்புரம்,அயன்செங்கல்படை,நமச்சிவாயபுரம்ஆகிய ஊராட்சிகளும் கலந்து கொண்டு மக்களின் கோரிக்கைகளை மனுவாக பெறப்பட்டது.

மேலும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ கலந்து கொண்டு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு மற்றும் வீடு பராமரிக்கும் பயனாளிகளுக்கு வேலை உத்தரவினை வழங்கினார்.

இந்நிகழ்வில் விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், ஸ்ரீனிவாசன், சமூகப் பாதுகாப்பு திட்ட தாசில்தார் விமலா, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மாவட்ட கவுன்சிலர் நடராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், சிவஞானபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தண்டாயுதபாணி,மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜா,ஆதிசங்கர்,
ஒன்றிய துணைச் செயலாளர் காளிதாஸ் பாண்டியன், விளாத்திகுளம் தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.