December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் பயணிகள் நிழற்குடை கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு பகுதியான எட்டையாபுரம் சாலை ஹவுசிங்போர்டு பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் 2022 23ம் ஆண்டு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 20 லட்சம் மதிப்பீல் கட்டப்பட்டுள்ள நிழற்குடை திறப்பு விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மேயர் ஜெகன் பொியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி கணக்கு குழு தலைவரும் தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான ரெங்கசாமி, அனைவரையும் வரவேற்றார்.
திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்.பி ாிப்பன் வெட்டி திறந்து வைத்து இனிப்பு வழங்கினார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஓன்றிய துணைச்செயலாளர் கணேசன், ஓன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், மாநகராட்சி பொறியாளர் சரவணன், உதவி பொறியாளா் பிாின்ஸ் ராஜேந்திரன், நகர அமைப்புதிட்ட உதவி செயற்பொறியாளர் ராமசந்திரன், மாவட்ட பிரதிநிதி பூபேஷ், மாவட்ட பொறியாளர் அணி துணைத்தலைவர் செல்வக்குமார், வட்டச்செயலாளர் தெய்வேந்திரன், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் வேல்முருகன், கப்பிகுளம் பாபு, அல்பட், உள்பட அரசுத்துறை அலுவலர்கள் திமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.