December 1, 2025
#Uncategorized

புதூர் வட்டாரம், சிவலார்பட்டியில் வேளாண்மைத்துறை சார்பில் 2024-2025 ஆண்டிற்கான விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் வழங்கும் விழா நடந்தது.

தூத்துக்குடி:புதூர் வட்டாரம், சிவலார்பட்டியில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் வழங்கும் விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,

விவசாயிகளுக்கு உளுந்து விதை,பயிறு நுண்ணூட்ட உரம்,திரவ உயிர்உரம் உள்ளிட்ட பொருள்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் புதூர் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) கல்பனா தேவி,துணை வேளாண்மை அலுவலர் ராமன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்,புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கம், கிருஷ்ணமூர்த்தி,புதூர் மத்திய ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் மோகன்தாஸ்,கரிசல் பூமி சங்கத்தலைவர் வரதராஜன், உதவி வேளாண்மை அலுவலர்கள் துர்கா,செல்வலட்சுமி,சங்கரேஸ்வரி,பயிர் காப்பீட்டு திட்ட களப்பணியாளர் விஜயகுமார், கிளைச் செயலாளர்கள் சுப்பையா, செல்லப்பாண்டி,சிங்கராஜ், விளாத்திகுளம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

.