தூத்துக்குடியில் 2-ஆம் கேட் முதல் அமெரிக்கன் மருத்துவமனை ரவுண்டானா வரை சாலையை அகலப்படுத்தும் பணி விரைவில்ஒ துவங்க இருப்பாதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
அதேபோல் தூத்துக்குடி நான்காம் ரயில்வே கேட் முதல் குறிஞ்சி நகர் டவர் வரை நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாநகரப் பொறுத்தவரை பல்வேறு சாலைகள் இதுபோல தரம் உயர்த்தப்பட்டும் அகலப்படுத்தப்பட்டும் வருகின்றது. அதுபோல் இரண்டாம் ரயில்வே கேட் முதல் அமெரிக்கன் ஹாஸ்பிட்டல் ரவுண்டானா வரை சாலையை அகலப்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அந்தப் பணிகளும் வருகின்ற நாட்களில் ஆரம்பமாகும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ஆய்வின் போது, திமுக மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார் அவர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்

