December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

மக்களின் மகிழ்ச்சி தான் எங்களது மகிழ்ச்சி பொருட்காட்சியை மேயர் ஜெகன் பொியசாமி பார்வையிட்டு தகவல்

தூத்துக்குடி உலக பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 442-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. புனித சவோியான இல்ல மைதானத்தில் ஓஎல்எஸ் பிரன்ட்ஸ் பொருட்காட்சி குழு எக்ஸ்போ 2024 திறப்பு விழா நடைபெற்று அடுத்த மாதம் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் பல்வேறு வகையான பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய புதிய ராட்டினம், என பல விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேயர் ஜெகன் பொியசாமி பொருட்காட்சியை பார்வையிட்டு கூறுகையில் ஆண்டுக்கு ஓரு முறை நடைபெறும் பனிமயமாதா திருவிழா என்பது அனைத்து தரப்பினரும் வந்து செல்லும் சமத்துவ திருவிழாவாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் மட்டுமின்றி கடல்கடந்து வௌிநாடுகளிலிருந்தும் வந்து செல்கின்றனர். அதற்கேற்றாற்போல் பனிமயமாதா கோவில் அமைந்துள்ள பகுதியில் திருவிழா முடியும்வரை மாநகராட்சி சார்பில் அதிக அளவில் தூய்மைபணியாளர்கள் நியமிக்கப்பட்டு இரவு பகலாக சூழற்சி முறையில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தேர் பவணி வருவதற்கு ஏற்ப சாலை உள்ளிட்ட கட்டமைப்பு பணிகளையும் செய்து கொடுத்துள்ளோம். மேலும் அடிப்படை பணி தேவை என்றால் மாநகராட்சி சாா்பில் செய்து கொடுப்போம். மக்களின் மகிழ்ச்சி தான் எங்களின் மகிழ்ச்சி என்று கூறினார்.
ஓஎல்எஸ் நண்பர்கள் பொருட்காட்சி குழு தலைவர் டென்சிங், செயலாளர் அருள், பொருளாளர் நிா்மலா, சட்ட ஆலோசகா் வக்கீல் செல்வின், மாநகராட்சி கணக்கு குழு தலைவர் ரெங்கசாமி, மாநகர திமுக தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, மாநகர மீணவரணி அமைப்பாளர் டேனி, பகுதி செயலாளர் சுரேஷ்குமார், பகுதி சபா உறுப்பினர் ஆர்தர் மச்சாது, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், தொழிற்சங்க செயலாளர் மாியதாஸ், வட்டச்செயலாளர் ராஜாமணி, போல்பேட்டை பகுதி பிரதநிதி ஜோஸ்பா், மற்றும் ஹெர்மன்கில்ட், ராேகஷ், உள்பட பலா் உடனிருந்தனர்.