தூத்துக்குடி தமிழக பாஜக மகளிரணி சமூக வலைதளம் தலைவர் அன்னபூர்ணா பிள்ளை மத்திய பட்ஜெட் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார் அதில் மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக தனது வெற்றியை நிலைநாட்டி பிரதமராக மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்றுள்ளார். இதனை தொடர்ந்து 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மத்திய பட்ஜெட்டில், 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான ஐந்து திட்டங்களுக்கு 2 லட்சம் கோடி தொகுப்பு, வேலைவாய்ப்பு மற்றும் கல்வித்திறன் மேம்பாட்டிற்காக ரூபாய் 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு மற்றும் 80 கோடி மக்களுக்கு உணவு தானியம் வழங்கும் திட்டம்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பு,விவசாயத்துறையில் டிஜிட்டல் புரட்சி செய்வதற்கு 32 தோட்டக்கலைகளில் 109 வகையான அதிக மகசூல் தரும் பயிர்கள் அறிமுகம் மற்றும் வேளாண்மை துறைக்கு ரூபாய் 1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு, உள்நாட்டு கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் வரை கடனுதவி, 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டம்.நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்காக ஹாஸ்டல் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்படும், பெண்களுக்கான திட்டத்தில் 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
தொழில் பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களுக்காக மாதம் ரூபாய் 5,000 மற்றும் ரூபாய் 6,000 சிஎஸ்ஆர் நிதியிலிருந்து தனியார் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று ஏழைகளுக்கான வீடு கட்டும் திட்டம், முத்ரா கடன் திட்டம், ஊரக வளர்ச்சி மேம்பாட்டு திட்டம், சூரிய ஒளி திட்டம், உள் கட்டமைப்பு, வசதி மேம்பாட்டிற்கு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் ஊக்கத்தொகை என ஏராளமான திட்டங்களுக்கு அதிக விதிகள் ஒதுக்கிடப்பட்டது.
அது மட்டுமின்றி இந்த திட்டங்கள் அனைத்துமே ஒட்டுமொத்த நாட்டிற்கும் உரியது என்பதை குறிக்கும் வகையில் ஒவ்வொரு திட்டத்தின் முடிவிலும் நாட்டு மக்களுக்கு!
ஒட்டுமொத்த நாட்டிற்கும் என்ற வார்த்தைகள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த நிதிநிலை அறிக்கையில் ஆந்திர பிரதேசம் மற்றும் பீகார் இந்த இரண்டு மாநிலங்களின் பெயர்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது தமிழகத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை தமிழகத்திற்கு ஒரு நிதியையும் இந்த மத்திய அரசு வழங்கவில்லை என்று திமுக, அதிமுக மற்றும் விடுதலை சிறுத்தை கண்காட்சி மத்திய அரசு தமிழகத்திற்கு ஒரு நிதியையும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கடுமையான எதிர்ப்புகளை காட்டி வருகிறது.
ஆனால், மத்திய பட்ஜெட் ஒட்டு மொத்த நாட்டிற்கும் தேவையான நிதியை தான் இதுவரை ஒதுக்கிட்டு ஒரு சில குறிப்பிட்ட மாநிலங்களின் பெயர்களை மட்டும் தான் குறிப்பிட்டுள்ளது அதற்காக பட்ஜெட்டை குறிப்பிடாத மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று அர்த்தமாகாது….
மத்திய அமைச்சர்நிர்மலா சீதாராமன் அவர்களால் மத்தியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் பிரதமர் மோடியின் இந்தியா 2047 தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப அமைந்துள்ளது! ரயில்வே பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மாநிலங்களில் தமிழகம் ரூபாய் 6,362 கோடியை பெற்றுள்ளது. ஆறு வந்தே பாரத் ரயில்கள், 77 மாதிரி அம்ரித் ரயில்கள் நிலையங்களும் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலங்களை ஒப்பிடும் பொழுது தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள வரி பகிர்வில் 94.95% அதிகரிக்கப்பட்டுள்ளது மற்றும் உதவி மானியங்களில் 157.58% அதிகரிப்பு தமிழக பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காக மற்றும் மேம்பாட்டிற்காக மட்டும் மத்திய அரசு 50,873.76 கோடி ஒதுக்கிட்டுள்ளது என்பதை திராவிட ஆட்சியாளர்கள் மறைக்க முயன்றாலும் மக்கள் அறிந்துகொள்வார்கள்…
அதுமட்டுமின்றி 2004 – 2014 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு ஒதுக்கிய நிதியானது 8,054 கோடி மட்டுமே, ஆனா 2014 முதல் 2024 வரை பாஜக அரசு மத்தியில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் 1,05,150 கோடி நிதி தமிழகத்திற்கு மட்டும் ஒதுக்கீடு செய்துள்ளது… காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தமிழ்நாட்டை கூறு போட்டு விற்ற கும்பல் இன்று தமிழகம் வரலாற்றில் காணாத அளவிற்கு நிதியை பெற்றதை கண்டு காழ்ப்புணர்ச்சி கொள்கிறது.. இந்த கூட்டத்தின் ஒரே குறிக்கோள் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற புரளி மக்களிடத்தில் பரவ வேண்டும் என்பதே…! ஆனால் தமிழர்கள் அறிவார்கள் பிரதமர் என்றுமே தமிழர்களையும், தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் உலகுக்கு எடுத்து சொன்னவர் . அவர் என்றும் தமிழகத்தின் நலன் கருதி செயலாற்றும் தேசிய தலைவர். என் கருத்து தெரிவித்துள்ளார்.

