December 1, 2025
#ஆன்மிகம் #வரலாறு

மிக பிரசித்திபெற்ற ஶ்ரீவில்லிபுத்தூர் கோவில் தேரோட்டம் எப்போது..?

தமிழகத்தின் சிறப்பு மிக்க ஆண்டாள் கோவில் தேரோட்டம் வருகின்றன ஆகஸ்ட் மாதம் 7 ம் தேதி நடைபெற உள்ளது என கூறப்பட்டுள்ளது.



விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அமைந்துள்ள ஆண்டாள் கோவில் வரலாற்று சிறப்புடன் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. பன்னிரு ஆழ்வார்களில் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் என இருவர் அவதரித்த பெருமைக்குரியது

இதில் ஆண்டாள் ஆழ்வார்களில் ஒரேயொரு பெண் ஆழ்வாராக திகழ்ந்து பெருமாள் மீது காதல் கொண்டு இறுதியில் அவரையே திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதனால் இங்கு ஆண்டாளுக்கு கோவில் எழுப்பி மக்கள் வழிபட்டு வருகின்றனர். மேலும் ஆண்டாள் அவதரித்த தினமாக ஆடிமாதம் பூரண நட்சத்திர நாள் இங்கு ஆடிப்பூர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் ஆண்டாளும் ரங்கமன்னாரும் தேரில் எழுந்தருளி உலா வருவார்கள்.

ஒரேயொரு கோபுரம் மற்றும் ஒரேயொரு தேர்:

 

ஆண்டாள் கோவிலை போலவே ஆண்டாள் கோவில் தேரும் வரலாற்று சிறப்புடன் விளங்குகிறது. திருவாரூர் தேருக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் மிகப்பெரிய தேராக ஶ்ரீவில்லிபுத்தூர் தேர் உள்ளது. மேலும் ஒரேயொரு கோபுரம் மற்றும் ஒரேயொரு தேர் என்ற சொல்லாடலும் ஶ்ரீவில்லிபுத்தூருக்கு உண்டு. ஏனெனில் வழக்கமான பாண்டிய தேசத்து பெரிய கோவில்கள் அனைத்து வாசல்களிலும் ஓங்கி உயர்ந்த கோபுரங்களை கொண்டிருக்கும். உதாரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை கூறலாம். அதே போல் தேரோட்டத்தின் போது முன்னாள் சிறிய தேர் எதிர் சேவை செய்ய பெரிய தேரில் மூலவர் எழுந்தருளி உலா வருவார்.

ஆனால் ஶ்ரீவில்லிபுத்தூரில் ஒரேயொரு ராஜா கோபுரம் மற்றும் ஒரேயொரு தேர் தான் உள்ளது. அவையுமே தமிழ்நாடு அரசு முத்திரை மற்றும் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தேர் என்ற சிறப்பு பெற்று விளங்குகிறது. இவ்வளவு சிறப்பு மிக்க ஆண்டாள் கோவில் தேரோட்டம் வருகின்றன ஆகஸ்ட் மாதம் 7 ம் தேதி நடைபெற உள்ளது என கூறப்பட்டுள்ளது. தற்போது அதற்காக தேர் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.