December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர்.

விதிமுறைகளை மீறிய குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு ஊராட்சி நிா்வாகம் அதிரடி நடவடிக்கை


தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 59 கிராமங்கள் உள்ளடக்கிய பகுதியாக இருந்து வருகிறது. அந்த ஊராட்சியில் ஏழை எளிய நடுத்தர என வாக்குாிமை பெற்றவர்கள் சுமார் 40 ஆயிரம் பேரும் 1 லட்சத்திற்கு அதிகமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றன. வளர்ந்து வரும் ஊராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகளை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடைபராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படியும் சண்முகையாஎம்.எல்.ஏ ஆலோசனை படி அனைத்து பகுதிகளுக்கும் பாரபட்சமின்றி அடிப்படை தேவைகள் அனைத்தும் பூா்த்தியாகும் நிலை தொடர்கிறது. குடிதண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு பல்ேவறு கட்ட நடவடிக்கைகளை ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்தின்கீழ் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு நேரடியாக குடிதண்ணீர் வழங்கப்படும் வகையில் இணைப்புகள் கொடுக்கப்பட்டு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. பல பகுதிகளில் சில சமயங்களில் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. கடந்த சில நாட்களாக மாப்பிள்ளையூரணிபகுதியில் குடிதண்ணீர்பல குடியிருப்புகளுக்குசாியாக வரவில்லை என்ற புகார் தொடா்ர்ந்து வந்ததையொட்டி மாப்பிள்ளையூரணி பகுதியில் வீடுகளுக்கு கொடுக்கப்பட்ட இணைப்புகளில் அரசு விதிமுறைகளை மீறிமின்மோட்டார்கள் பொருத்தி தண்ணீா் எடுக்கப்பட்டதால் அதே பகுதியில் பல இடங்களுக்கு தண்ணீர் வராத நிலை ஏற்பட்டதையொட்டி மாப்பிள்ளையூரணி ஊராட்சி நிர்வாகம் சாா்பில் அதுபோன்ற முறையற்ற மின்மோட்டார்கள் பொறுத்தப்பட்டுள்ளதா என்று ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வீடு முதல் பொதுமக்கள் வீடு வரை ஆய்வு செய்துவிதிமுறை மீறிய வீடுகளில் உள்ள மின்மோட்டார் இணைப்புள்ள குடிதண்ணீர் இணைப்பை உடனடியாக துண்டித்தனர். இந்த ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், செயலாளர் ஜெயக்குமாா், உறுப்பினர்கள் மகேஸ்வாி, பாரதிராஜா, தங்கமாாிமுத்து, திமுக ஓன்றிய துணைச்செயலாளார் கணேசன், கிளைச்செயலாளர் காமராஜ், உள்பட பலர் உடன் சென்றனர்.