புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் மேலும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய சமையலறை கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இதனையடுத்து ரேஷன் கடை மற்றும் சமையலறை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது.
புதூர் ஊராட்சி ஒன்றியம்,
லட்சுமிபுரம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ12.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கட்டிடத்தினையும்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ 7.43 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமையலறைக் கட்டிடத்தினையும் திமுக தலைமை செயற்க்குழு உறுப்பினர் மார்கண்டேயன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் புதூர் பிடிஓக்கள் சசிகுமார்,வெங்கடாசலம்,கூட்டுறவு சார்பதிவாளர் முருகன்,பொது விநியோகக் கூட்டுறவு சார்பதிவாளர் மகேஸ்வரன், கூட்டுறவு சங்க செயலாளர் ராமச்சந்திரன்,புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ்,
மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்,பேரூர் கழகச் செயலாளர் மருதபாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக்,துணைத் தலைவர் ஜெயபிரதாப்,கிளை செயலாளர் முத்துப்பாண்டி,விளாத்திகுளம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.ண

