December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருதை தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் பெற்றது.

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு ‘தமிழ்நாடு முதலமைச்சரின்” சிறந்த காவல் நிலையத்திற்கான விருதை இன்று வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) ஆதாம் அலி அவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் வழங்கி வாழ்த்தினார்.

தமிழ்நாடு அரசு மாவட்ட, மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையங்களை தேர்வு செய்து ‘தமிழ்நாடு முதலமைச்சர்” பரிசு வழங்கியுள்ளது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருதை இன்று (26.07.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) திரு. ஆதாம் அலி அவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் வழங்கி இதே போன்று எப்போதும் சிறந்து விளங்க வேண்டும் என வாழ்த்தினார்.