December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 90 பேருக்கு அமைச்சர் கீதாஜீவன் பட்டா வழங்கினார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடியிருந்து வருபவர்களிடம் கடந்த 18ம் தேதி வடக்கு மண்டல அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் கோாிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதில் 325 மனுக்கள் பெறப்பட்டன. கோமதிபாய் காலணி, சக்திவிநாயகபுரம், ஸ்டேட்பாங்க காலணி, நடராஜபுரம், ஆகிய பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருபவர்களுக்கு டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் 90 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கி செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

“90 பேருக்கு இன்றயை தினம் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதி உள்ளவர்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று கள ஆய்வு செய்து வருவாய் துறை அதிகாாிகள் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பார்கள். இதே போல் நகாில் பிற பகுதிகளில் மக்கள் பட்டா பெறாமல் இருந்தாலும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தனி கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களுக்கும் பட்டா வழங்க ஏற்பாடு செய்துள்ளார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சென்னையை சுற்றியுள்ள பகுதியில் பட்டா வழங்கியுள்ளார்கள். கணினி பட்டா இல்லாத மக்கள் நம்முடைய பகுதியிலும் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்றும். மகளிர் உாிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு கள ஆய்வு செய்து திரும்ப வழங்க கனிெமாழி எம்.பி ஏற்பாடு செய்துவருகிறார். மேலும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கை சீரமைத்து பராமாித்து நல்லமுறையில் வீரர்கள் பயன்படுத்தும் வகைக்கு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் சிறப்பு நிதி ஓதுக்கியுள்ளாா். 4ம்இரயில்கேட் பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கு நகர்புற வளர்ச்சி துறை அமைச்சருக்கு கோாிக்ைக வைத்துள்ேளாம் அதில் அமைப்பதற்காக வழிகள் உள்ளது என்று பதில் தந்துள்ளார்கள். முதலமைச்சர் முக.ஸ்டாலின் விரைவில் 4ம் கேட் மேம்பாலம் அமைத்து தருவதாக கூறியுள்ளார்” என்று அமைச்சர் கீதாஜீவன் தொிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் பிரபு, தாசில்தார் பிரபாகரன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, கவுன்சிலா்கள் தெய்வேந்திரன், அதிஷ்ட மணி, கண்ணன், சரவணக்குமார், கற்பககனி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டச் செயலாளர்கள் செந்தில்குமார், குட்டி, சந்தனமாாிமுத்து, கருப்பசாமி, மாவட்ட மருத்துவரணி தலைவர் அருண்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர் பிரபு, மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், துணை அமைப்பாளர் ரவி, மாநகர கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் அற்புதராஜ், மாநகர வக்கீல் அணி தலைவர் நாகராஜன்பாபு, பகுதி பிரதிநிதி பேச்சிமுத்து, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மணி, அல்பட், கணேசன், மாாிமுத்து, காங்கிரஸ் மண்டலத்தலைவர் சேகா், உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பயனாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.