December 1, 2025
#விளாத்திகுளம்

விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் நடந்த மரக்கன்று நடுவிழாவில் தாசில்தாா் ராமகிருஷ்ணன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

விளாத்திகுளம் அறம் செய் அறக்கட்டளை சார்பில் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சமூக சேவை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் மரக்கன்று மற்றும் அழகு தாவர மரங்கள் நடும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.இதில் விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தை சுற்றிலும் புங்கை மரம்,வேம்பு மரம் மற்றும் அழகு தாவர மரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் நடப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் அறம் செய்ய அறக்கட்டளை நிர்வாகிகள் கலைவாணி,சந்திரசேகர்,ராகவன், அழகர்,சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.