தூத்துக்குடி தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாளில் இருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், ரேசன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் நிறுத்தியதை கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் வி.வி.டி சிக்னல் அருகே எம்.ஜி.ஆர் திடலில் வைத்து மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசுகையில் மின் கட்டண உயர்வு, ரேசன் கடையில் வழங்கும் அத்தியாவசிய பொருட்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கள்ளச்சாரயம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் போன்ற விவகாரங்களை திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டித்தும், திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டினை சுட்டிக்காட்டியும் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், மாநில அமைப்பு சாரா ஓட்டுநரணி இணை செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாநில மீனவர் அணி துணை தலைவர் ஏரோமியாஸ், வர்த்தக அணி இணைச் செயலாளர் ஆனந்தராஜ், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் பெருமாள், ஜெ பேரவை விஜயகுமார், இலக்கிய அணி நடராஜன், அண்ணா தொழிற்சங்கம் ராஜா, மாணவரணி விக்னேஷ், இளைஞர் இளம் பெண்கள் பாசறை தனராஜ், சிறுபான்மை பிரிவு பிரபாகர், விவசாய அணி சுதர்சன்ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு அருண்ஜெபக்குமார், அண்ணா ஆட்டோ தொழிற் சங்க செயலாளர் நிலா சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் யூனியன் சேர்மன் வசந்தாமணி, இணைச் செயலாளர் செரினா, மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர் திருச்சிற்றம்பலம், மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் காசிராஜன், அழகேசன், ராஜ்நாரயணன், சௌந்தரபாண்டி, தாமோதரன், மனோகரன், நகர செயலாளர்கள் மௌலானா, மகேந்திரன், பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், ஜெய்கணேஷ், நட்டார்முத்து, பகுதி ஜெ பேரவை செயலாளர் சுடலைமணி, பகுதி பொறுப்பாளர் செண்பகச் செல்வன், முன்னாள் தக்கார் கோட்டை மணிகண்டன், மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர் மனுவேல்ராஜ், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டலச் செயலாளர் கல்விக்குமார், துணை செயலாளர் சுந்தர், முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணித் தலைவர் குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் தேவவிண்ணரசி, பேரூராட்சி செயலாளர்கள் காசிராஜன், ரவிச்சந்திரன், செந்தில்ராஜகுமார், துரைச்சாமிராஜா, வேதமாணிக்கம், ஆறுமுகநயினார், அசோக்குமார், கோபாலகிருஷ்ணன், குமரகுருபரன், சோமசுந்தரம், கிங்சிலிஸ்டார்லின், வீரவெற்றிவேல், முன்னாள் அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ருமணி, மாநகராட்சி எதிர்கட்சிக் கொறடா மந்திரமூர்த்தி, வழக்கறிஞர்கள் செங்குட்டுவன், கருப்பசாமி, முனியசாமி, சரவணபெருமாள், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் ஜோதிமணி, சத்யாலெட்சுமணன், முத்துக்கனி, நவ்சாத், மாரியப்பன், முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, யூனியன் துணைச் சேர்மன்கள் விஜயன், அப்பாதுரை, ரேஜிபெர்ட், தலைமை பேச்சாளர் முருகானந்தம், ஜான்சன்தேவராஜ், கவுன்சிலர் வெற்றிச்செல்வன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பாலமேனன், சித்திரைப்பாண்டி, சரவணன், ஒன்றியக் கவுன்சிலர்கள் மகாராஜன், ரமேஷ், பொன்ராஜ், குமார், கார்த்திசன், ஸ்டன்லி, ராம்குமார், பெரியதுரை, சரவணன், தினகரன், முன்னாள் நகர செயலாளர்கள் பால்துரை, அரசகுரு, மாவட்ட பிரதிநிதி விஜயன், முன்னாள் கவுன்சிலர்கள் மெஜிலா, சாந்தி, தமிழரசி, பொன்ராஜ், சந்தனபட்டு மகளிர் அணி நிர்வாகிகள் சண்முகத்தாய், இந்திரா, ஜெயராணி, ராஜேஸ்வரி, அன்னபாக்கியம், அன்னத்தாய், வட்ட செயலாளர்கள் ஜனார்த்தனன், சந்திரசேகர், பாக்கியராஜ், பாண்டி, முருகன், அருண்ராஜா, ஜெயக்குமார், முருகன், முருகன், அருண் ஜெயக்குமார், மணிவன்னன், ரகுநாதன், ரெங்கன், உதயசூரியன், மனோகரன், வேலு, ஈஸ்வரன், பூர்ண சந்திரன், செல்வராஜ், மாடசாமி, கண்ணையா, மாரிமுத்து, யோவான் சொக்கலிங்கம், வெங்கடேஷ், உலகநாதபெருமாள் நிர்வாகிகள் வேல்பாண்டி, பார்வதி, ராமசாமி, வைரமணி, சக்திவேல், வீரபாண்டியன், முத்துக்கிருஷ்ணன், ஆறுமுகநயினார், அன்பரசு பிரபாகர், பூல்பாண்டியன், முத்துக்குமார், ராஜ்குமார், ஜெயகுமார், கண்ணன், தென்கரை மகாராஜன், ராபின்சன், யுவன்பாலா, விக்கி திருத்துவசிங், சாம்ராஜ், சரவணவேல், சிவமாடசாமி, வேல்சாமி, சுப்புநாராயணன், ராஜா, சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா, அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டல இணைச் செயலாளர் லெட்சுமணன், மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயாராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

