தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி தாளமுத்துநகர் சோனா மஹாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மாப்பிள்ளையூரணி ஊராட்சிப் பகுதி மக்களுக்கு 20க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் அடங்கிய மக்களுடன் முதல்வர் குறைதீர்க்கும் 2ம் நாள் முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் முன்னிலை வகித்தார்.
ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளரும் எம்எல்ஏ-வுமான சண்முகையா தலைமை வகித்து இரு பயனாளிகளுக்கு பட்டா மற்றும் ஓரு பயனாளிக்கு நலிந்தோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.
இந்த முகாமில் குடிநீர், வீட்டு வரி, பெயர் மாற்றம், கட்டிட அனுமதி, திடக்கழிவு மேலாண்மை, பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் வேண்டி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மெகா முகாமில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அளித்தனர்.
நிகழ்ச்சியில் தாசில்தார்கள் பிரபாகரன், தூத்துக்குடி ஊராட்சி ஓன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, தெற்கு மாவட்ட திமுக சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மகளிர் திட்ட அலுவலர் மல்லிகா, கிராம நிர்வாக அலுவலர்கள் அமலதாசன், ராஜலெட்சுமி, மீனாட்சி. திருவரங்க செல்வி, வேளாண்மை துறை உதவி வேளாண்மை அலுவலர் மீனாட்சி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பகவதிகுமாா், சுடலைமணி, முத்துகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பாலமுருகன், கூட்டுறவு சார்பதிவாளர் செயலாட்சியர் கிருஷ்ணன், இளநிலை உதவியாளர் மாரிமுத்து, கள அலுவலர் காசுகனி, பொதுசேவை மைய அலுவலர் ராஜலட்சுமி, இளநிலை உதவியாளர்கள் பிரபாகர், மூக்கையா, தீபா, ராஜா, வினோத், குமாரலிங்கம், கார்த்திக், சின்னத்தாய், சுந்தர், தங்கராஜ், டாக்டர் தினேஷ், மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார ஆய்வாளர்கள் வில்சன், பிரதீப்குமார், முகமது ஆசீக், ராஜலெட்சுமி, ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஸ்பாலன், தொம்மைசேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, வசந்தகுமாரி, ஸ்டாலின், சக்திவேல், தங்கபாண்டி, ஒன்றிய அவைத்தலைவர் முருகன், துணைச்செயலாளர்கள் கணேசன், ராமச்சந்திரன், ஒன்றிய வழக்கறிஞரணி அமைப்பாளர் சோனா ராஜன், கிளைச்செயலாளர்கள் காமராஜ், பொன்னுச்சாமி, மகாராஜன், வேல்ராஜ், முருகன், காசி, போஸ் மற்றும் கப்பிக்குளம் பாபு உட்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கீழ அழகாபுாி, பொதுமக்கள் குடிதண்ணீர் நீர்தேக்க தொட்டியிலிருந்து சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டதிற்கிணங்க பொதுமக்கள் பயன்பாட்டிற்கு
புதிய நீர்தேக்க தொட்டியை ாிப்பன் வெட்டி தொடங்கி வைத்து கருப்பசாமி நகர் கீதாஜீவன் நகர் பகுதி மக்களுக்கு புதிதாக அமைக்கப்பட்ட தண்ணீர் குழாய் மக்கள் பயன் பாட்டிற்கு தொடங்கி வைத்தார். கீழ அழகாபுாி ஊர்தலைவர் மாடசாமி உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பாக்ஸ்: மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் நடைபெறுகின்ற மக்களுடன் முதல்வர் முகாமில் பொதுமக்கள் பல்ேவறு கோாிக்கைகள் குறித்து மனுக்களை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஓருவர் கோாிக்கை மனு அளித்த பின் மாநகர பகுதியில் குடியிருந்த நான் தற்போது 20 ஆண்டுகளாக மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் குடியிருந்து வருகிறேன். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து மக்களுக்காக பணியாற்றினாா். அவர் மறைவிற்கு பின் ஜெயலலிதா ஆட்சியில் இந்த ஊராட்சி பகுதியில் எந்த பணியுமே நடைபெறவில்லை. கடந்த கால திமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ பொியசாமி காலத்தில் இந்த ஊராட்சிக்கு பட்டா வழங்கினார். அதன்பின் அமைச்சராக இருந்த கீதாஜீவன் பட்டா வழங்கினார். தற்போது பட்டா இல்லதவா்களுக்கு வழங்கப்படும் என்ற நம்பிக்கை எல்லோருடைய மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் செய்யாத திட்டங்கள் திமுக ஆட்சியில் கிடைக்கப்பெற்று நான் நன்மை அடைந்துள்ளேன் இதுபோன்ற முகாம்களில் மக்களின் குறைகள் பல தீர்க்கப்பட்டுள்ளது என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

