தூத்துக்குடி மாநகர திமுக பிரதிநிதிகள் கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் தலைமையில் மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில:
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் நடைபெறும் கூட்டமாக இருப்பதால் இது உங்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகத் தான் இந்த கூட்டம். காரணம், கனிமொழி எம்.பி. இந்த தொகுதியில் 86,780 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தமிழக முதலமைச்சர் தளபதியார் ஓராண்டுக்கு முன்பே திட்டமிட்டு செயல்பட்டு நமக்கு அறிவுரைகள் வழங்கினார். அதில், உங்களை நம்பி உடன்பிறப்புகளுக்கு கூறுகிறேன். ஒற்றுமையாக பணியாற்றுவோம், வெற்றியை பெறுவோம் என்று தளபதியார் கூறியதன் காரணமாக நாம் பணியாற்றினோம். அதிலும், இங்கு இருக்கிற நிர்வாகிகள் முதல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பணியாற்றினார்கள். இந்த வியூகம் தான் நமக்கு வெற்றியை தந்தது.
தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் என இரண்டிலும் கழக வேட்பாளர்கள் வெற்றிக்காக மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முழுமையாக பிரச்சாரம் மேற்கொண்டார். அதேபோல் இந்த மாவட்டத்தில் 40 நாட்கள் எல்லா பகுதிகளுக்கும் சென்று கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டதால் எதிர்த்து நின்ற அத்தனை பேரும் டெபாசிட் இழந்தனர். இதற்கு அங்கீகாரம் கொடுத்தவர்களும் நீங்கள் தான். உங்களை மனதார பாராட்டுகிறேன்.
மேட்டுப்பாளையம் முதல் தூத்துக்குடி வரை இரயில் போக்குவரத்து திட்டத்தை கொரானா காலக்கட்டத்தில் நிறுத்தியதை மீண்டும் தொடர வேண்டும் என்று தொடர்ந்து இரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் அந்த துறை அமைச்சரை சந்தித்த கோரிக்கை வைத்ததால், மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி இரயில் விடப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணியை முதலமைச்சர் உருவாக்கி அதை முன்னெடுத்து ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட்டதன் காரணமாக இந்திய அரசியல் அமைப்பு சட்டம் காக்கப்பட்டுள்ளது. 400 தொகுதியில் வெற்றி பெறுவோம் என்றெல்லாம் கூறிய மோடிக்கு இதுதான் உங்களுக்கு நிலைமை, என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுவிட்டது. நினைத்த மாதிரியெல்லாம் இனி நீங்கள் செயல்பட முடியாது. தமிழ்நாட்டில் 40க்கு 40 தொகுதிகளையும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 3 ஆண்டு ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த மாநிலத்தில் பல திட்டங்களையும் கொள்கைகளையும் பல மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. தளபதியார் 2026ல் தேர்தலின் போது 200 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளார்.
நாம் செய்த சாதனைகளை எல்லா பகுதிகளுக்கும் கொண்டு சென்று நிர்ணயித்த இலக்கை விட அதிகமான தொகுதியில் வெற்றி பெற அனைவரும் களப்பணியாற்ற வேண்டும். இளைஞரணி, மகளிரணி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். எந்த குறைகளாக இருந்தாலும், உடனடியாக கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். அதிலும் குறிப்பாக அரசு துறை அதிகாரிகள் முறையாக பணி செய்யவில்லை என்றாலும் திட்டத்தை நடைமுறைப்படுத்த மறுத்தாலும் எனக்கு தகவல் கொடுங்கள். அதை நான் சரிசெய்து தருவேன். அதிக விழிப்போடு இருந்து இன்னும் 18 மாதங்கள் தொடர் பணியாற்ற வேண்டும். புதுமைப்பெண், தமிழ்புதல்வன் உள்ளிட்ட பல திட்டங்களில் பல நன்மைகள் இருப்பதையும் எடுத்துக் கூறுகள். இந்தியாவில் உள்ள மாநிலத்தில் 98 சதவீதம் பேருக்கு 3 வேளையும் சாப்பாடு கொடுக்கும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. பிஜேபி ஆளும் மாநிலத்தில் கூட இப்படி நடைமுறை இல்லை.
ஜெயலலிதா அறிவித்து நடத்திய அம்மா மருந்தகம், காய்கனி கடை போன்றவற்றை இந்த அரசு தடைசெய்யாமல் நல்ல திட்டம் என்பதால் தொடர்ந்து நடைபெறுகிறது. நேற்றைய தினம் கூட அம்மா உணவகத்தை முதலமைச்சர் ஆய்வு செய்து மேலும் விரிவுபடுத்தும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தூத்துக்குடி அருகே டைட்டல்பார்க் விரைவில் ஆரம்பமாக உள்ளது. கார் தொழிற்சாலை உற்பத்தியை தொடங்க உள்ளன. ஒரு மாநில வளர்ச்சிக்காக கல்வி, தொழில், உள்ளிட்ட கட்டமைப்புகளை உருவாக்கி செயல்படுத்துவதால் பொருளாதார நிலை உயர்ந்து வருகிறது. முதல்வரின் முகவரியிலும், மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்திலும் எந்த குறைகள் தெரிவித்தாலும், அதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது கூட அதில் ஒரு துறைக்கு அமுதாவை முதலமைச்சர் நியமித்துள்ளார். எல்லோரும் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்று கேட்டுக்கொண்டார்.கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலெட்சுமி, கலைச்செல்வி, நிர்மல்ராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரி தங்கம், மாநகர துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாவட்ட அணி தலைவர் அருண்குமார், அமைப்பாளர்கள் அபிராமிநாதன், அன்பழகன், அந்தோணி ஸ்டாலின், கவிதாதேவி, குபேர்இளம்பரிதி, சீனிவாசன், அசோக், ரமேஷ், பொன்சீலன், துணை அமைப்பாளர்கள் நிக்கோலாஸ்மணி, ராமர், சின்னத்துரை, பெனில்டஸ், அருணாதேவி, பார்வதி, அந்தோணிகண்ணன், பிரபு, நாகராஜன், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், ரூபஸ், அருண்சுந்தர், ஜெயக்கனி, டேனி, சாகுல்ஹமீது, ஜெயசீலி, பார்த்தசாரதி, துணை அமைப்பாளர்கள் மகேஸ்வரன்சிங், ரவி, மணி, பெல்லா, செந்தில்குமார், சீதாலெட்சுமி, நாராயணவடிவு, பரமசிவம், சக்திவேல், மணிகண்டன், ரூபராஜா, கவுன்சிலர்கள் கந்தசாமி, முத்துவேல், விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ், வைதேகி, சரவணகுமார், தெய்வேந்திரன், சுயம்பு, சுப்புலெட்சுமி, நாகேஸ்வரி, ஜாண்சிராணி, மெட்டில்டா, ஜாக்குலின்ஜெயா, பேபி ஏஞ்சலின், பாப்பாத்தி, பவாணி, ராஜேந்திரன், சுதா, ராமர், ஜாண், கண்ணன், தலைமை பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சேர்மபாண்டி, சக்திவேல், செல்வகுமார், ராஜ்குமார், வட்ட செயலாளர்கள் பாலகுருசாமி, ரவீந்திரன், ராஜாமணி, சுப்பையா, சிங்கராஜ், சதீஸ்குமார், முத்துராஜா, மூக்கையா, மனோ, சுரேஷ், கருப்பசாமி, கதிரேசன், பொன்ராஜ், செல்வராஜ், மந்திரகுமார், பொன் பெருமாள், மாநகர வக்கீல் அணி தலைவர் நாகராஜன்பாபு, மகளிரணி சத்யா, ரேவதி, மற்றும் கருணா, மணி, பிரபாகர், லிங்கராஜா, அல்பட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தருவை விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு அரங்கம், பார்வையாளர்கள் மாடம், உடற்பயிற்சி கூடம் அனைத்தையும் சரி செய்வதற்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற உள்ளது. தூத்துக்குடி விளையாட்டு வீரர்களின் நன்மை கருதி பணம் ஒதுக்கி பணிகளை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வரும் திமுக மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இதற்கு பெருமுயற்சி செய்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக, திமுக கழகத்தைச் சார்ந்த நிர்வாகிகள் குடும்ப உறுப்பினர்கள் மறைவிற்கு இரங்கள் தெரிவித்து ஒருநிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

