December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

கோரம்பள்ளத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய சண்முகையா எம்.எல்.ஏ

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கோரம்பள்ளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கோரம்பள்ளம், அய்யனடைப்பு, மறவன்மடம் ஆகிய 3 ஊராட்சிப் பகுதி மக்களுக்கு 20க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் அடங்கிய மக்களுடன் முதல்வர் குறைதீர்க்கும் முகாமிற்கு ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா தலைமை வகித்து ஒரு பயனாளிக்கு பட்டா வழங்கினார்;.
இந்த முகாமில் குடிநீர், வீட்டு வரி, பெயர் மாற்றம், கட்டிட அனுமதி, திடக்கழிவு மேலாண்மை, பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் வேண்டி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மெகா முகாமில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் உதவி தாசில்தார் ரமேஷ், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பானு, மணிவாசகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துலெட்சுமி, நாராயணன், மகளிர் திட்ட அலுவலர் மல்லிகா, வருவாய் ஆய்வாளர்கள் செல்வக்குமார், சாந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார், மீனாட்சி, பிரேமலதா, ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வபிரபா அதிசயராஜ், அதிஷ்;டகணபதி, லில்லி மலர், ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் பொன்மலர் செல்வராஜ், ராஜேந்திரன், ஊராட்சி மன்ற செயலாளர்கள் சீனிராஜ், சத்தியராஜ், சங்கரராமன், வேளாண்மை துறை துணை வேளாண்மை அலுவலர் ஆனந்தன், உதவி வேளாண்மை அலுவலர் மீனாட்சி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் முத்துகிருஷ்ணன், பகவதி, கூட்டுறவு சார்பதிவாளர் அந்தோணி பட்டுராஜ், மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் காசிகனி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மாரிமுத்து, செந்தில்குமார், மல்லிகா, ஜெயம், திமுக ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, மாவட்ட பிரதிநிதி நாகராஜ், ஒன்றிய தொழிலாளரணி செயலாளர் மொபட்ராஜன், இளைஞரணி சண்முகநாராயணன், மாணவரணி சற்குணம், வழக்கறிஞரணி மகேந்திரன், நிர்வாகிகள் அருள் ஜெயபால், ராஜ், சின்னதுரை, சண்முகபுரம் சின்னதுரை உட்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.