December 1, 2025
#விளாத்திகுளம்

விளாத்திகுளம் அருகே உள்ள வீரகாஞ்சிபுரம் தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியைக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது

விளாத்திகுளம் அருகே உள்ள வீரகாஞ்சிபுரம் தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியைக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.அரசு உதவி பெறும் வீரகாஞ்சிபுரம் இந்து நாடார் தொடக்கப்பள்ளியில் 36 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் தலைமையாசிரியை முத்தானந்தவள்ளிக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் வைத்து நடந்த விழாவிற்கு பள்ளிச் செயலாளர் கென்னடி தலைமை வகித்தார். திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா். அதனைத்தொடர்ந்து தலைமை ஆசிரியை முத்தானந்தவள்ளிக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

பள்ளி ஆசிரியர் ஆல்பின் பர்னபா வரவேற்றாா். சென்னை மற்றும் மதுரை வாழ் வீரகாஞ்சிபுரம் நாடாா் சங்க உறுப்பினர்கள் முருகேசபாண்டியன்,மாடசாமி,மாரியப்பன்,கந்தசாமி,பெரியசாமி,காமாட்சி,தங்கவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனர்.மதுரை இலக்கிய மன்ற நிறுவனர் அவணி மாடசாமி,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில் உட்பட ஊர் பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனர்.