தூத்துக்குடி 49வது வார்டுக்குட்பட்ட கருணாநிதி நகரில் உள்ள நன்றி செலுத்தும் குழந்தைகள் மேம்பாட்டு மையத்தில் வைத்து காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் கொண்டாடப்பட்டது. பின்னர் ஏழை எளிய குழந்தைகளுக்கும் பள்ளி மாணவ மாணவியருக்கு நோட்புக் மற்றும் கல்வி உபகரணங்களும் இரவு உணவும் வழங்கினார். 
விழாவில் தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், பகுதி செயலாளர் பொன்ராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜன் கண்ணா, வட்ட செயலாளர்கள் ராஜா, ஜெகதீஸ்வரன், அருண்குமார், சிறுபான்மை பிரிவு பிரபாகரன், அந்தோனி செல்வராஜ், செல்வின், லெட்சுமணன், தருவை ராஜா, மணிகண்டன் என்ற அய்யப்பன், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் ராஜேந்திரன், முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வட்ட பிரதிநிதி சுப்புராஜ் செய்திருந்தார்.

