தூத்துக்குடி மக்களவை தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளராக போட்டியிட்டு கனிமொழி எம்.பி வெற்றி பெற்றதையொட்டி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். மேயர் ஜெகன் பொியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொட்டல்காடு கிராமத்தில் நன்றி தொிவிக்கும் நிகழ்ச்சி தொடங்கி முள்ளக்காடு, அத்திமரப்பட்டி விலக்கு, முத்தையாபுரம் பல்க் சந்திப்பு, அய்யன்கோவில் தெரு, தோப்பு தெரு, சத்யாநகா், பக்கிள்புரம் சந்திப்பு, போல்டன்புரம், சிதம்பரநகா், பிரையன்ட்நகர், கட்டபொம்மன்நகா், 3வது மைல், ஆகிய பகுதிகளில் நன்றி தொிவித்து, பாலிடெக்னிக் அருகில் முடித்துக்கொண்டார்.
முன்னதாக கனிமொழி எம்.பி பொதுமக்களுக்கு நன்றி தொிவித்து பேசுகையில் என்மீது அன்பு வைத்து இரண்டாவது முறையாக மாபெரும் வெற்றியை தேடி தந்த உங்களுக்கு எனது இதயபூா்வமான நன்றியை தொிவித்துகொள்கிறேன். நம்முடைய முதலமைச்சர் மீது நீங்கள் நம்பிக்கை வைத்து 40க்கு 40தையும் வெற்றி பெற செய்துள்ளீர்கள் அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இந்த தொகுதியில் தொழில் முதலீடுகளை கொண்டு வந்து சேர்த்து பல தொழிற்சாலைகளை உருவாக்கி அதன்மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுப்பேன். மாவட்ட வளர்ச்சிக்கு முழுமையாக என்னை அர்ப்பணித்துக்கொள்வேன், என்மீது உங்களுக்கு இருக்கின்ற நம்பிக்கைக்கு என்று நன்றி கடன் பட்டவளாக பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன் இந்த தொகுதியில் நானும் அமைச்சர் கீதாஜீவனும் இனணந்து உங்களை குறைகளை தீர்த்து வைப்பேன் மகளிர் உாிமைத்தொகை விடுபட்டவர்களுக்கும் அந்த தொகை முறையாக கிடைப்பதற்கு வழி வகை செய்வேன் என்று பேசினாா்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட அணி அமைப்பாளா்கள் ரமேஷ், கவிதாதேவி, பரமசிவம், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பிரபு, அந்தோணி கண்ணன், நாகராஜன் பெனில்டஸ், அருணாதேவி, பெருமாள், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தர், ஜெயக்கனி, கிறிஸ்டோபர் விஜயராஜ், ரூபன், துணை அமைப்பாளர்கள் ரவி, மகேஸ்வரன்சிங், பிக்அப் தனபால், பால்ராஜ், சீதாராமன், செந்தில்குமார், சக்திவேல், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், தமிழ்பிாியன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், இசக்கிராஜா, பொன்னப்பன், கண்ணன், ராஜதுரை, விஜயகுமார், பட்சிராஜ், வைதேகி, விஜயலட்சுமி, ராஜேந்திரன், முத்துவேல், அரசு வழக்கறிஞர் ஆனந்தகபாியேல்ராஜ், வட்டச்செயலாளர்கள் முக்கையா, பொன்பெருமாள், சுப்பையா, செல்வராஜ், முத்துராஜா, நவநீதன், பிரசாந்த், மனோ, சிங்கராஜ், நடஷேன் டேனியல், மனோகர், சுரேஷ், பொட்டல்காடு சந்தனராஜ், முள்ளக்காடு பக்கிள்துரை, ரூபன், சில்வர்ஸ்டர் சிவா, தங்கமாள்புரம் மாாிமுத்து, வளர்மதி, சூசைநகர் மாாிமுத்து, பகுதி பிரதிநிதி ஸ்டீபன் ராஜேஷ், துணைச்செயலாளர் தங்கசேகா், இளைஞர் அணி அசோக் சரவணன் ராஜன் சின்னத்துரை பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, செந்தூர்பாண்டி, மற்றும் கருணா, மணி, அல்பட், மகளிர் அணி சத்யா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதிமுக மாநகர செயலாளா் முருகபூபதி, மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர்கள் சரவணபெருமாள், பாலசுப்பிரமணியன், ஓன்றிய செயலாளர் செந்தூர் பாண்டியன், தொழிற்சங்க துணைச்செயலாளர் பொன்ராஜ், மாநகர துணைச்செயலாளர் டேவிட்ராஜ், பொட்டல்காடு சிபிஐ கிளைச்செயலாளர் பரமசிவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன், உள்பட இந்தியா கூட்டணியை சோ்ந்த பலர் கலந்து கொண்டனர்.

