தூத்துக்குடி கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 65 பேர் மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகத்தில் தொடர்ந்து கள்ளச்சாராயம், கஞ்சா, ஹெராயின் போன்ற போதை பொருட்கள் நடமாட்டம் அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்ற பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் ஆட்சி செய்து வரும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து தமிழக சட்ட சபை கூட்டத் தொடரில் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கடுமையான வாக்குவாதம் செய்ததோடு உண்ணாவிரத போராட்டமும் செய்தார். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களிடம் ஆதரவு திரட்ட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
அதன்படி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நோட்டீஸ் வழங்கி நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று மக்களிடம் ஆதரவு திரட்டினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் ஹென்றி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் சுதாகர், யூனியன் சேர்மன் வசந்தாமணி, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் பெருமாள், விஜயகுமார், தனராஜ், விக்னேஷ், ஜூலியட், பிரபாகர், நடராஜன், நிலா சந்திரன், ஒன்றியச் செயலாளர்கள் காசிராஜன், அழகேசன், ராஜ்நாராயணன், சௌந்தரபாண்டி, மனோகரன், முன்னாள் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி தலைவர் குணசேகரன், மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி, பகுதி செயலாளர்கள் ஜெய்கணேஷ், முருகன், சேவியர், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் சத்யா லெட்சுமணன், நவ்சாத், மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் சுகந்தன் ஆதித்தன், வக்கீல் முனியசாமி, சரவணப்பெருமாள், மாநகராட்சி கவுன்சிலர் வெற்றிச்செல்வன், முன்னாள் கவுன்சிலர்கள் சந்தனப்பட்டு, தமிழரசி, தலைமை பேச்சாளர் முருகானந்தம், ஜான்சன்தேவராஜ், நிர்வாகிகள் மாரியப்பன், விஜயன், உலகநாதபெருமாள், கொம்பையா, அருண்ஜெயக்குமார், மணிகண்டன், ஜெயக்குமார், பூர்ணசந்திரன், மகளிர்கள் இந்திரா, ராஜேஸ்வரி, முத்துலெட்சுமி, சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா, வக்கில் ராஜ்குமார், மகாலிங்கம், சுரேஷ், பாஸ்கர், சுடலை, உதயகுமார், பாலமுருகன், தாசன், ரமேஷ் மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா, உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

