December 1, 2025
#அரசியல் #தூத்துக்குடி மாவட்டம்

ஆசிய ஸ்குவாஷ் போட்டியில் பதக்கம் வென்ற தூத்துக்குடி பள்ளி மாணவிக்கு பிஜேபி நிா்வாகிகள் வாழ்த்து தொிவித்தனர்

தூத்துக்குடி அழகர் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த முனியராஜு – முத்துசெல்வி தம்பதியரின் மகள் கௌசிகா கடந்த ஜூன் 25 முதல் 29ம் தேதி வரை பாகிஸ்தான் நாட்டில் உள்ள இஸ்லாமாபாத்தில் ஆசிய ஸ்குவாஷ் கூட்டமைப்பு சார்பில் 12 ஆசிய நாடுகளுக்கு இடையே 13 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் நடைபெற்ற ஆசிய ஜுனியர் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றதையடுத்து தெற்கு மாவட்ட பாஜக சார்பாக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் சிவராமன், மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம், விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் சேர்மகுருமூர்த்தி, விளையாட்டு பிரிவு மாவட்ட பொறுப்பாளர் சுந்தர்கணேஷ், ஜடிவிங் மாவட்டதலைவர் காளிராஜா, இளைஞரணி மாவட்ட துனைதலைவர் சக்திவேல், விளையாட்டுபிரிவு மாவட்டசெயலாளர் சிட்டிசன் சிவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்