December 1, 2025
#ஊராட்சி

குளத்தூர் ஊராட்சியில் புதிய பேவர் பிளாக் சாலைப் பணியை ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வபாண்டி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ,விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குளத்தூர் கிராமத்தில் 15வது நிதிக்குழுமானியத்தின் கீழ் புதிய பேவர் பிளாக் பணி ரூபாய் 700000/-(ஏழு லட்சம் ) மதிப்பீட்டின் கீழ் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் தெருவிலிருந்து செட்டியார் தெரு வரை நடைபெற்று வருகிறது .மேலும் T.S காய்கறி கடை வீட்டிலிருந்து முத்துமாரியப்பன் வீடு வரை கழிவுநீர் கால்வாய் ரூபாய் 300000/-(மூன்று லட்சம்)மதிப்பீட்டில் பணி நடைபெறுகிறது .இப்பணி வரும் குளத்தூர் ஆனித்திருவிழா விற்கு முன்பு விரைவில் முடிக்கவேண்டும் என்று ஒப்பந்தகாரரிடம் கூறினார் .அதை முன்னிட்டு பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருப்பதை ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வபாண்டி கள ஆய்வு செய்தார் .