தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் உத்தரவுபடி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதை சூழற்சி முறையில் எல்லா பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ளுவது மட்டுமின்றி தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்றும் புதிதாக சில பணிகளையும் செய்து தரவேண்டும். என்று மேயர் ஜெகன் பொியசாமியிடம் போல்பேட்டை அலுவலகத்திலும் மாநகராட்சி அலுவலகத்திலும் பொதுமக்கள் கொடுக்கும் கோாிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில்

மாநகராட்சி அலுவலகத்தில் தூத்துக்குடி மாநகர மதிமுக செயலாளா் முருகபூபதி மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணபெருமாள், ஆகியோர் மேயர் ஜெகன் பொியசாமியிடம் அளித்த கோாிக்கை மனுவில் 45வது வார்டுக்குட்பட்ட தூத்துக்குடி பிரையண்ட் நகர் 12 மேற்கு கட்ட பொம்மன்நகர் நான்கு முக்கு சந்திப்பில் தினமும் தனியார் கம்பெணி பஸ்கள் மினி பஸ்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் என பல்வேறு போக்குவரத்து இருப்பதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு போதிய விளக்கு வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஆகவே பொதுமக்கள் நலன்கருதி அந்த நான்கு முக்கு சந்திப்பில் மின்கோபுர விளக்கு அமைத்து தரவேண்டும் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து மேயா் ஜெகன் பொியசாமி கூறுகையில் மாநகாில் பல இடங்களில் பொதுமக்கள் நலன் கருதி உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளிலும் உங்களது கோாிக்கையை ஏற்று ஆய்வு மேற்கொண்டு செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பா், மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.

