December 1, 2025
#அரசியல் #தூத்துக்குடி மாவட்டம்

விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் சீமானுக்கு எடப்பாடி ஆதரவு தூத்துக்குடி ஓபிஎஸ் அணி கண்டனம்

தூத்துக்குடி தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் எம்எல்ஏ ஆணையின்படி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமையில் மாநகர் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சிதம்பரநகர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் போட்டியிடாமல் புறக்கனித்துவிட்டு நாம் தமிழர் கட்சிக்கு மறைமுக ஆதரவு தொிவித்த எடப்பாடி பழனிச்சாமியை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கத்தை ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம் ஓன்றுப்பட வேண்டும் என்று ஓபிஎஸ் வேண்டுகோளை புறக்கணித்தும் 40 தொகுதிகளிலும் அதிமுகவை பாதாள குழியில் தள்ளி டெபாசிட் இழக்க செய்த துரோகி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துரோக கும்பலை வன்மையாக கண்டிப்பது உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் மாடசாமி, இணைச் செயலாளர் உமா கண்ணன், துணைச் செயலாளர் பேச்சியம்மாள், பகுதி செயலாளர்கள் லோகு கணேசன், செல்லத்துரை, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாமுவேல், விவசாய அணி செயலாளர் முத்துக்குமார், வர்த்தக அணி செயலாளர் சண்முகம், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் கமலக்கண்ணன், மந்திரம், மாரியப்பன், செல்வராஜ், ராமகிருஷ்ணன், இணை செயலாளர் ஜெயராமன், சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் மார்ட்டின், ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் வேலுமணி, எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சுதாகர், ஜெ பேரவை துணைச் செயலாளர்கள் ராஜதுரை, லிங்கராஜ், மகளிர் அணி இணைச் செயலாளர் சந்திரா, வட்ட செயலாளர்கள் கருப்பு, ஜெயபால், வேல்சாமி, மணிகண்டன், திருமால், இலக்கிய அணி இணைச் செயலாளர் சிவசூரியன், மத்திய தெற்கு பகுதி எம்ஜிஆர் மன்ற செயலாளர் நல்ல தம்பி, மத்திய தெற்கு பகுதி சிறுபான்மை பிரிவு ஞானராஜ், வட்ட பொருளாளர் கணேஷ், சபிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.