December 1, 2025
#செய்தி

தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்க முதல் மாநில மாநாடு நடைபெற்றது.

வெ.சிவக்குமார்மாநிலபொதுச்செயலாளர்தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சங்கம். எடுத்த தீர்மானம்.

தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சக்கரவர்த்திலலிதா திருமண மண்டபத்தில் இன்று 30.6.2024 1000 பணியாளர்கள் கலந்துகொண்ட முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1.கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் ஆகியோருக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

2.கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் 2000 ஆண்டிற்கு முன்பும் 2000 ஆண்டிற்கு பின்பும் பணியில் சேர்ந்த O.H.T. ஆப்ரேட்டர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் என்ற அடிப்படையில் சம ஊதியம் வழங்க வேண்டும்.

3.தூய்மை காவலர்களுக்கு நேரடியாக ஊராட்சி ஒன்றியம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்.

4.மாநிலம் முழுக்க பணியாளர்கள் விவரத்தை டிஜிட்டல் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

5.பணியாளர்கள் அனைவருக்கும் ATM மூலம் ஊதியம் வழங்க வேண்டும்.

6.ஒன்றிய அளவில் பணியாளர்களின் பணிகளை மேற்பார்வை செய்வதற்கும், குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் வட்டார அளவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை நியமனம் செய்யவேண்டும்.

7.பணியாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.

8.பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர்/ 2024 மாதத்தில் சென்னையில் பேரணி நடத்துவது. போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது என தோழமையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம் என வெ.சிவக்குமார்
மாநில பொதுச்செயலாளர்
தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சங்கம் கூறினார்