December 1, 2025
#ஊராட்சி #தூத்துக்குடி மாவட்டம்

கலைஞர் கனவு இல்லம் சிறப்பு கிராமசபை கூட்டம் குளத்தூர் ஊராட்சியில் நடைப்பெற்றது

குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் விதமாக ‘கலைஞர் கனவு இல்லம்’ எனும் திட்டம் தொடங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்திற்க்கு அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி குடிசையில் வசிக்கும் மக்களுக்குப் புதிதாக வீடு கட்டித் தரும் பொருட்டு 2024 – 2025ஆம் நிதியாண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது

, ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள தகுதி வாய்ந்த பயனாளிகள் பட்டியல் மற்றும் ஊரகக்குடியிருப்புகள் பழுது நீக்கம் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த வீடுகளைக் கொண்ட பயனாளிகள் பட்டியல் ஆகியவற்றை ஒப்புதல் பெற 30.06.2024ஆம் தேதி சிறப்புக் கிராம சபைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குளத்தூர் ஊராட்சியில் இன்று நடத்த பட்டு
இத்திட்டம் பற்றிய தகவல்கள் மற்றும் அதுசார்ந்த கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது. அப்போது ஊராட்சி மன்ற தலைவர் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களிடம்
இத்திட்டத்துக்கான வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். மேலும் என்ன என்ன நடைமுறைகள் உள்ளன என்பதை விளக்கினார் ,
வீடுகள் அனைத்தும் 360 சதுரடி அளவில் சமையலறையுடன் இருக்க வேண்டும். இதில் 300 சதுரடி ஆர்.சி.சி கூரையுடனும், மீதமுள்ள 60 சதுரடிக்கு தீப்பிடிக்காத பொருளில் அமைக்கப்பட்ட கூரையாகவும் பயனாளிகளின் விருப்பத்துக்கேற்ப அமைக்கப்பட வேண்டும்.

மண்ணால் கட்டப்படும் சுவர்கள் கூடாது. செலவை குறைக்கும் தொழில்நுட்பங்கள், விரைவான கட்டுமானம் போன்றவை அனுமதிக்கப்படுகிறது.ஓலை அல்லது  சிமெண்ட் கூரைகள் அமைக்கப்படக்கூடாது. ஒரு வீட்டுக்கான தொகை அனைத்தையும் சேர்த்து ரூ.3.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்துக்கான தகுதியான பயனாளிகளை கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி உதவி பொறியாளர் அல்லது வட்டார பொறியாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர், ஊராட்சி மேற்பார்வையாளர் ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்ய வேண்டும்.

திட்டத்திற்கு ஒரு வீட்டுக்கு ரூபாய் 3,50,000 லட்சம் கிடைக்கும்.
வீடு கட்ட மூன்று தவணையாக பணம் வழங்க படும்.
1. அஸ்திவாரம் போட்ட பிறகு முதல் தவணை பணம் கிடைக்கும் .
2.வீட்டின் மேற்கூரை (ரூப் கான்கீரீட்) போட்ட பிறகு இரண்டாவது தவணை பணம் வழங்க ப்படும்
3. வீடு முழுவதும் கட்டிமுடிக்கப்பட்டதும் 3-வது தவணை பணம் வழங்க படும்.
கனவு இல்ல திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் தகுதிகள் ;

1 .குடிசை வீட்டில் வசிப்பவராக இருக்கவேண்டும்

2 வாடகை வீட்டில் வசித்து சொந்தமா காலி மனை வைத்திருப்போர்.
3. குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப்புறத்தில் ஏதாவது இடம் வாங்கி போட்டு இருந்தால் பட்டா இடமாக இருக்க வேண்டும்.

4. இடம் மனுதாரர் பெயரில் இருக்க வேண்டும்
5. அரசாங்க வேலை பார்க்க கூடாது
கொண்டு வரக்கூடிய ஆவணங்கள் :
1. பத்திரம் ஜெராக்ஸ் காப்பி
2. பட்டா ஜெராக்ஸ் காப்பி
3. கம்ப்யூட்டர் பட்டா
4. வில்லங்க சான்று
5. காலி மனைக்கு கரம் தீர்த்த ரசீது
6. ரேஷன் கார்டு ஜெராக்ஸ் காப்பி
7. ஆதார் கார்டு ஜெராக்ஸ் காப்பி
மேற்கண்ட அனைத்து ஆவணங்களும் 2.07.2024
மாலை 5-மணிக்குள் ஊராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். என தீர்மானம் ஏற்றப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி செல்வபாண்டி துணை தலைவர்
மாரி செல்வி பாலமுருகன்.
பணி மேற்பார்வையாளர் ஞானலதா செயலர் காந்தி ராஜ்
7வத வார்டு உறுப்பினர் சாந்தி , 8வது வார்டு உறுப்பினர் ஜீவிதா 2வது வார்டு உறுப்பினர் நன்னி ராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.